நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
யாஸ் புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிக்கிறது. இந்த தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று புயலாக (Cyclone) மாறியுள்ளது. இதற்கு யாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த யாஸ் புயல் 25ம் தேதி (நாளை) அதிதீவிர புயலாக மாறி, வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ம் தேதி மாலையில் கரை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் (Cyclone Yaas) காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ALSO READ | Cyclone Yaas: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்
ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரை கடக்கும் இந்த புயல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலால் ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும் ஜார்க்கிராம், மேதினிபூர், பர்தமான், கொல்கத்தா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், யாஸ் புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதே போல, ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் துறைமுகத்திலும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. யாஸ் புயல் மீட்பு பணிக்காக 606 மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR