யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம் ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. தங்களது பைக்குக்களை வாங்கியுள்ள மற்றும் பைக் ரேசில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருமுறை பைக் ரேஸ் நடைபெறும் டிராக்கில் வாகனத்தை ஓட்டிப்பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கோவை செட்டிபாளையம் பகுதியில் கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே என்ற பந்தய சாலை உள்ளது. இங்கு கார் மற்றும் பைக் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு நிறைய பணம் செலவாகும் என்று நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அதற்கான முயற்சியை முடக்கிப் போட்டிருக்கும் சூழலில் யமஹா நிறுவனம் அத்தகைய இளைஞர்களுக்கு ஒரு முறை கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே 'ரேஸ் டிராக்கில்' வாகனத்தை ஓட்ட வாய்ப்பை வழங்கியுள்ளது. 



இன்றைய நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பைக் மீது ஆர்வம் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரேஸ் டிராக்கில் முதல் முறையாக தங்களது பைக்கை ஓட்டினர். 


யமஹா நிறுவனம் தயாரித்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளை வாங்கியவர்கள் இந்த  நிகழ்வில் கலந்து கொண்டு முதல் முறையாக பந்தய வீரர்கள் பலர் தங்களது சாதனைகளை படைத்த இடத்தில் தாங்களும் பைக் ஓட்டியதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.



முதல் முறையாக ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவது போன்று நினைக்காமல் ஒரு பைக் பந்தய வீரர் தனக்கான வாய்ப்பை பயன்படுத்துவது போல் இந்த இளைஞர்களும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பந்தயம் நடைபெறும் இடத்தில் தங்களது பைக்கில் சீறிப்பாய்ந்தனர்.


மேலும் படிக்க | Best Bikes: மிகச்சிறந்த மைலேஜ் அளிக்கும் இந்தியாவின் டாப் பைக்குகள்


முதல் முறையாக ஒரு பந்தய வீரரைப் போல் உணர்ந்ததாகவும், பைக் மீது மேலும் ஆர்வத்தை ஊட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்ததாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | 56 வயதில் 2400 கி.மீ பைக்கில் பயணம் செய்த பெண்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR