நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இளைஞர் அப்பகுதியினை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை கொண்டு போலி முகநூல், ட்விட்டர் கணக்குகளை துவங்கி ஆபாசமாக பதிவிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குமாரபாளையம்  போலீசார் இளைஞர் முருகேசனை கைது செய்து  சிறையிலடைத்துள்ளனர். போக்சோ வழக்கில் இளைஞரை கைது செய்யக்கோரி பெண்கள் காவல் நிலையம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை: கரூரில் உள்ள சொகுசு பங்களா வீட்டில் மீண்டும் சோதனை


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வி.மேட்டூர் பகுதியில் உள்ள பெண்கள் சிலரின் புகைப்படங்களுடன் முகநூல் மற்றும் ட்விட்டர் அக்கவுண்டுகள் துவங்கப்பட்டு, அதில் ஆபாசமான வார்த்தைகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அப்பகுதி இளைஞர்களை நோக்கி வந்த இந்த சமூக வலைதள பதிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் கொந்தளிப்பாகவும் இருந்துள்ளனர். காரணம் சில இளைஞர்களுடைய மனைவிகளின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் முகநூலில் கணக்குகளில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.


மேலும், அந்த அக்கவுண்டுகளில் அப்பெண்களே முகநூல் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆபாச புகைப்படங்கள் அனுப்பியது போலவும், பேசியது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கொண்ட காவல்துறையினர், இந்த செயலில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அறுமுகம் என்பவரின் மகன் முருகேசன் என்பது தெரியவந்தது. போலியான முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளை துவங்கி ஆபாசமாக பெண்களை சித்தரித்தும், ஆபாச வார்த்தைகளை பதிவு செய்ததும் அவர் தான் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து அவரை குமாரபாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதை அறிந்த வி.மேட்டூரைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் திடீரென காவல்நிலையம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர். அப்போது, இளைஞர் முருகேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் காவல்துறையினர் ஈடுபட்டதை தொடர்ந்து வி.மேட்டூர் மக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர் முருகேசனை குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 


மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ