நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் ஸிங்க் (zinc) மாத்திரைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுபுப்பணியில் தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு ஜிங்க் (zinc) மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கொரோனா நோய் தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல் களப்பணியாற்றி வருக்கின்றனர். பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, போலீஸ் மற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான மாஸ்க்குகள், உரிய பாதுகாப்பு உடைகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.


தொடர்ந்து போர்க்கால அடிப்படையில், பணியாற்றி வரும் மேற்கண்ட அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தில், ஜிங்க் மாத்திரைகளும், மல்டி வைட்டமின் மாத்திரைகளும், நாளை முதல் 10 நாட்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும்" என  அந்த அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.