கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியின் டீஸரினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டிருந்தார். 


இந்த டீஸர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.


இந்நிலையில், Bigg Boss 2- வின் முதல் போட்டியாளராக காமடி நடிகர் 'பவர் ஸ்டார்'' தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!


இவர், லத்திகா, கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட பல படங்களில், தன்னுடைய நகைச்சுவை திறமையால் அனைவராலும் கவரப்பட்டவர். தற்போது தொடர்ந்து, பலபடங்களில் நடித்து வரும் பவர் ஸ்டாரை அடுத்த மாதம் பிக்பாஸ் 2 இல் நீங்கள் பார்க்கலாம்.


இதுவரை படத்தில் மட்டுமே காமெடி செய்து வந்த பவர் ஸ்டார், பிக் பாசில்- 2- வில் காமெடி செய்வாரா அல்லது நிஜ வாழ்க்கையிலும் காமெடியான நகைச்சுவை மனிதராக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.