சேலம் - பெங்களூரு புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் திருவாக்கவுண்டனூரில் ரூபாய் 82 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார்.


சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்கும் வகையில் மேம்பாலப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திருவாக்கவுண்டனூரில் இருந்து குரங்குச்சாவடி வரை 1280m தொலைவுக்கு ரூபாய் 82 கோடி செலவில் 4 வழிப்பாதை கொண்ட புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 


இந்த பாலத்தின் உதவியால் தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசலின்றிச் சேலம் மாநகருக்கு வந்து செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று நடைபெற்ற இப்பாலம் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட தமிழக முதல்வர், தாரமங்கலத்தில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைத்து மேம்பாலம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். 


அதேவேலையில் ஆத்தூர் நகரக் காவல்நிலையம், கருமந்துறை காவல் வட்டம் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக மாநகரக் காவல்துறை சார்பில்  தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகட்டையும் அவர் வெளியிட்டார். 


இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகரக் காவல் ஆணையர் சங்கர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.