பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேடு!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு அறிவித்துள்ளது!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு அறிவித்துள்ளது!
தமிழ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவேட்டினை பயோமெட்ரிக் முறை படி குறிக்கும் நடைமுறை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ரூ.9 கோடி செலவீட்டில், அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் சிஸ்டத்தினை அமைக்கும் பணி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நடப்பாண்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதேவேலையில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170-லிருந்து 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கான கட்டுபாடுகளை கடைப்பிடிக்கும் வகையில் இனி பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு அறிவித்துள்ளது.
இந்த முறை மூலம் ஆசிரியர்களின் குறைகால வருகை, வருகை தட்டுப்பாடு போன்ற விஷயங்கள் குறையும் என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.