காவிரிக்காக விவசாய சங்கங்களுடன் இணைந்து வரும் மே 19-ஆம் நாள் முதல் கூட்டம் நடத்தவுள்ளதா கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்தாபனரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று காவிரி பிரச்சினை குறித்து விவசாய சங்கங்களுடன் இணைந்து  ஆலோசனை நடத்தினார்.


இச்சந்நிப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் அவர்கள் தெரிவிக்கையில்... “காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டுவதற்காக,  ஒரு விரிவான சந்திப்பை அனைத்து அமைப்புகளும் கலந்து விவாதித்தோம். அதன் அடிப்படையில், அனைத்து விவசாய அமைப்புகளின் ஆலோசனைப்படியும், பிற வல்லுநர்களின் வழிகாட்டுதல்படியும், காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்கிற தலைப்பில் களம் காணவும், போராட்ட ஒற்றுமையை உருவாக்கவும் விரும்புகிறோம்.





அதற்கான முதல் கூட்டத்தினை வரும் மே 19-ஆம் நாள் காலை 10 மணியளவில் சென்னை, பெரியமேட்டில் நடைபெறும். 


அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், நீர் மேலாண்மை வல்லுநர்கள், அக்கறையுள்ள பெருமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என இருகரம் கூப்பி அழைக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.