30 லட்சம் மொபைல்கள் விற்பனை... அலைமோதும் மக்கள் - அப்படி என்ன சிறப்பு?
Redmi 12 Series: Redmi நிறுவனத்தின் இந்த மொபைல் மொத்தம் 30 லட்சம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
Redmi 12 Series: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Xiaomi நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. Samsung நிறுவனம் இதில் முன்னிலை வகித்தாலும், Xiaomi மொபைல்களும் பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. அதாவது, சாம்சங் மற்றும் ஆப்பிளை அடுத்து, இந்தியாவில் மொபைல் விற்பனையில் Xiaomi மூன்றாவது இடத்தில் உள்ளது. அதன் சந்தை பங்கு 13.7 சதவீதமாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் Xiaomi தனது சந்தைப் பங்கை 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், மிக முக்கிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் Xiaomi புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிறுவனத்தின் Redmi 12 தொடரின் 30 லட்சம் யூனிட்கள் இதுவரை விற்பனையாகி உள்ளன. இந்த மொபைல் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. Redmi 12 சீரிஸின் தேவை அதிகமாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் இது 5G இணைப்புடன் வரும் மலிவான ஸ்மார்ட்போன் என்பதால் இதனை பலரும் வாங்க நினைக்கின்றனர். இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இதில் காணலாம்.
Redmi 12 ஸ்மார்ட்போன் சீரிஸ் 6.79 இன்ச் முழு HD+ எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rates) மற்றும் 550 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது. காட்சிக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலின் பிராஸஸர் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 ஆகும். இது LPDDR4X RAM மற்றும் UFS 2.2 இன்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
Redmi 12 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 இல் இயங்குகிறது. மொபைலின் பின்புற கேமராவில் 50MP பிரதான கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா உள்ளது. முன் கேமராவில் 8MP கேமரா உள்ளது. மொபைலின் இரண்டு நானோ சிம் கார்டுகள் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இதில் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது. மொபைலில் 5000mAh பேட்டரி உள்ளது, இதை 18W ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம்.
Redmi 12 சீரிஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 10 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இந்த போன் 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. இது தவிர, 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜின் விலை 12 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். இந்த மொபைலை நீங்கள், Mi.com, Mi Home, Mi Studio மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்ல் பார்ட்னர் ஸ்டோர்களில் இருந்து வாங்கலாம்.
மேலும் படிக்க | 108 மெகாபிக்சல் கேமராவுடன் மெகா ஸ்மார்ட்போன்கள்... அமேசானில் அற்புத தள்ளுபடியுடன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ