பிளிப்கார்ட்டின் பம்பர் ஆஃபர்! இதுவரை இல்லாத தள்ளுபடி விலையில் ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் மெகா ஆஃபரில் இதுவரை இல்லாத தள்ளுபடி விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்துள்ளது.
Flipkart Kodak Smart TV ஆஃபர்
ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart-ல் ஸ்மார்ட் டிவிகளை மிக குறைவான விலையில் வாங்கலாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே திரையரங்குகளுக்கு இணையான அனுபவத்தை பெற விரும்பினால் அதற்கு சரியான தேர்வு ஸ்மார்ட் டிவிக்கள் மட்டுமே. இப்போது 43 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கள் பிளிப்கார்ட்டின் மெகா ஆஃபரில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
மேலும் படிக்க | IPL போட்டிகளுக்காக புதிய ஜியோ கிரிக்கெட் திட்டங்கள்: ரிலையன்ஸ் ஜியோ
Flipkart Kodak ஸ்மார்ட் டிவி சலுகை:
பிளிப்கார்ட்டின் Kodak 7X Pro 108 cm (43 inch) அல்ட்ரா ஹெச்டி (4K) LED ஸ்மார்ட் ஆண்டிராய்டு டிவியை ரூ.23,999க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட் டிவியின் வழக்கமான மார்க்கெட் விலை 28,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த டீலில் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.11 ஆயிரம் வரை சேமிக்கலாம். முழுமையான எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைத்தால் 15,999 ரூபாய்க்குக் கூட இந்த டிவியை நீங்கள் வாங்கலாம்.
வங்கிச் சலுகை
Kodak 7X Pro 108 cm (43 inch) அல்ட்ரா ஹெச்டி (4K) LED ஸ்மார்ட் ஆண்டிராய்டு டிவிக்கு வங்கிச் சலுகையும் கிடைக்கும். ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி கிடைக்கும்பட்சத்தில் நீங்கள் இந்த ஸ்மார்ட் டிவியை 13,799 ரூபாய்க்கு வாங்கலாம்.
Kodak TVகளின் அம்சங்கள்
கொடக் 7X Pro 108 cm (43 inch) அல்ட்ரா ஹெச்டி (4K) LED ஸ்மார்ட் ஆண்டிராய்டு டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் Google Assistant மற்றும் Chromecast அம்சங்களும் கிடைக்கும். அல்ட்ரா HD 4K டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியில், நீங்கள் 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்தைப் பெறுவீர்கள். 24W ஒலி வெளியீடு கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியில், Amazon Prime Video மற்றும் YouTube போன்ற பல பயன்பாடுகளுக்கான அணுகலும் உண்டு.
மேலும் படிக்க | iPhoneApple: ஆப்பிள் புதிய ஐபோன் சந்தா சேவையை அறிமுகப்படுத்துகிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR