ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேரும் தாயகம் திரும்ப நடவடிக்கை தேவை என வெளிவுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில், தமிழக மீனவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகள் பல ஊரடங்கை அமல்படுத்தியதால், பொது போக்குவரத்துகள் ரத்து செய்யபட்டுள்ளது. இதனால், ஈரான் நாட்டில் மீன்பிடிக்க சென்ற  650 தமிழக மீனவர்கள் அங்கு சிக்கி தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்


அந்த கடித்தில் அவர் எழுதியுள்ளதாவது, "தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 650 மீனவர்கள் ஈரானில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு அங்கு உணவு, குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், அவர்கள் விரைவில் நாடு திரும்ப வழிவகை செய்யவேண்டும்' என அந்த கடிதத்தில் முதலவர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.