பூமி போன்ற புதிய கிரகம் சூரியனுக்கு அண்மையில் கண்டுபிடிப்பு…!
சூரியனில் உள்ள சிவப்பு நிற நட்சத்திரதில், பூமியின் அளவையொத்த கிரகம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரியனில் உள்ள சிவப்பு நிற நட்சத்திரதில், பூமியின் அளவையொத்த கிரகம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சத்திரம் நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் அமைந்துள்ளதாக, நமது வானியியலாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த சிவப்பு நட்சத்திரத்தின் பெயர் ராஸ் 128 ஆகும். இந்த நட்சத்திரத்தினை ஒரே ஒரு கிரகம் சுற்றி வருவதாகவும் மேலும், இந்த கிரகத்தில் திரவ வடிவிலான நீர் இருக்க வாய்ப்பிருப்பதால், அங்கு வாழ்வதற்கான சூழல் உள்ளது என்றும்அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற நட்சத்திரங்களை போன்று இல்லாமல் ராஸ் 128 மிக அமைதியான, கதிரியக்க சிதறல்கள் எதுவும் இல்லாத ஒன்றாக இருக்கிறது. கதிரியக்க சிதறலானது உயிரினங்கள் கிரகத்தில் வாழ்வதற்கான சூழலை தொடங்குவதற்கு முன்பே, முற்றிலும் அழித்து விடும் தன்மை கொண்டதாகும்.
இதற்கு முன், கண்டுபிடிக்கப்பட்ட டிரேப்பிஸ்ட் 1 என்ற சிவப்பு நட்சத்திரம் அது பூமியில் இருந்து 40 ஒளி வருடங்கள் தொலைவு கொண்டதாகும். மேலும் இதனை பூமியின் அளவு கொண்ட 7 கிரகங்கள் சுற்றி வருகின்றன. இந்த நச்சதிரமானது, பூமியில் இருந்து 11 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது.
ராஸ் 128 நட்சத்திரத்தில் இருந்து அதனை சுற்றி வரும் கிரகம் 4.5 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள புதன் கிரகம் கூட சூரியனில் இருந்து 36 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. ஆனால் இது சூரியன் மற்றும் பூமிக்கு இடையேயான 93 மில்லியன் மைல்கள் என்ற தொலைவை விட மிக குறைவாகும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவை ஒத்து, சிவப்பு நட்சத்திரம் மற்றும் புதிய கிரகம் இடையேயான தொலைவு அமைந்து இருந்தால் அது மிக குளிராக இருக்கும். ஆனால், ராஸ் 128ஐ மிக நெருங்கிய நிலையில் புதிய கிரகம் உள்ளதால் திரவ நீருக்கு தேவையான வெப்பம் உறிஞ்சப்படுகிறது. இந்த திரவ நீர் வாழ்வதற்கு தேவையான பொருள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.