Nokia 6.1 Plus வருகையால் Nokia 6.1 விலையில் அதிரடி குறைப்பு!
Nokia நிறுவனத்தின் Nokia 6.1 Plus விரைவில் வெளியாகவுள்ள நிலையில் Nokia 6.1 மொபைலின் விலை குறைந்துள்ளது!
Nokia நிறுவனத்தின் Nokia 6.1 Plus விரைவில் வெளியாகவுள்ள நிலையில் Nokia 6.1 மொபைலின் விலை குறைந்துள்ளது!
பிரபல மொபைல் நிறுவனமான Nokia வரும் ஆகஸ்ட் 21-ஆம் நாள் தனது புதுரக போன்களை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது, குறிப்பாக பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள Nokia 6.1 Plus இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட Nokia 6.1-ன் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது.
Nokia 6.1 அறிமுகத்தின் போது.... 3GB variant - Rs 16,999-க்கும், 4GB variant - Rs 18,999-க்கும் வெளியிடப்பட்டது. தற்போது இந்தியாவில் Nokia 6.1 Plus வெளியாகவுள்ள நிலையில் Nokia 6.1 3GB variant - Rs 15,499-க்கும், 4GB variant - Rs 17,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பழைய விலையினை விட Rs.1500 தற்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Nokia 6.1 சிறப்பம்சங்கள்...
5.5" முழு HD திரை
Snapdragon 630 chipset
4GB RAM, 64GB உள் நினைவகம்.
Android 8.0 Oreo இயக்கமுறை
3000mAh மின்களன்
LED flash-உடன் கூடிய 16MP பின் கேமிரா, 8MP முன் கேமிரா.
4G, VoLTE, Wi-Fi, Bluetooth, GPS என கூடுதல் அம்சங்களுடன் Nokia 6.1 வெளியாகிறது.