ஜியோ 5ஜி Vs ஏர்டெல் 5ஜி! எந்த நெட்வொர்க் சிறந்தது!
டெல்லியில் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி வேகம் 600எம்பிபிஎஸ் மற்றும் ஏர்டெல்லின் சராசரி வேகம் 200எம்பிபிஎஸ் ஆக உள்ளது.
நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்க தொடங்கியுள்ளது. இந்தியா பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க் சேவைகளை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகு, இந்தியாவின் டாப் 2 தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இடையே போட்டி தொடங்கியுள்ளது. இரண்டு நெட்வொர்க்குகளும் சிறப்பாகவே செயல்படுகிறது, ஏர்டெல் நிறுவனம் பல வருடங்களாக சேவைகளை வழங்கி வருகிறது அதேபோல ஜியோ நெட்வொர்க் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா?
ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி நெட்வொர்க் சேவையை கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், வாரணாசி மற்றும் குருகிராம் ஆகிய எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை அக்டோபர் 5-ம் தேதி முதல் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நான்கு நகரங்களில் அறிமுகப்படுத்தியது. வேகம் மற்றும் கவரேஜை பொறுத்தவரையில் ஏர்டெல்லை காட்டிலும் ரிலையன்ஸ் ஜியோ சிறப்பாக உள்ளது. ஜியோ சுமார் ரூ.88,000 கோடி செலவிட்டு 700Mhz பேண்ட் கவரேஜ், 3.5Ghz பேண்ட் திறன் மற்றும் 26Ghz mmWave band-ன் இணைய வேகம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
ஜியோ 5ஜி-ன் நெட்வொர்க் வேகம் அதிகமாகவும் 600எம்பிபிஎஸ் சராசரி வேகம் கொண்டதாகவும் உள்ளது என்று கூறப்படுகிறது. ஏர்டெல் 5ஜி-ன் சராசரி வேகம் 516Mbps ஆக உள்ளது. டெல்லியில் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி வேகம் 600எம்பிபிஎஸ் மற்றும் ஏர்டெல்லின் சராசரி வேகம் 200எம்பிபிஎஸ் ஆக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி திட்டத்தை ரூ. 239 முதல் வழங்குகிறது, இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 1ஜிபிபிஎஸ் நெட்வொர்க் வேகம் கிடைக்கும். 4ஜி திட்டங்களின் விலைகளிலேயே ஏர்டெல் 5ஜி சேவைகளை வழங்குகிறது, ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க் 4ஜி சிம் கார்டுகளுடன் 5ஜி நெட்வொர்க்கிற்கு இணக்கமான சாதனங்களிலும் கிடைக்கும். போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு திட்டங்களை ஜியோ வழங்குகிறது. ஏர்டெல் 5ஜிக்கான பிரீமியம் சலுகைத் திட்டங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏர்டெல் 5ஜி சேவையின் விலைகள் முறையே ரூ. 500 முதல் ரூ. 600 வரை இருக்கும்.
மேலும் படிக்க | இதை செய்யாவிட்டால் பான் கார்டு அம்போ... உடனே கவனிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ