சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா?

ஜியோ நிறுவனம் தான் வழங்கி வந்த 12 ரீசார்ஜ் திட்டங்களை எந்த அறிவிப்பும் நிறுத்தியுள்ளது. அதன் காரணம் குறித்து இங்கு காண்போம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 14, 2022, 09:56 PM IST
  • 12 பிளான்களும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் தொடர்புடையது.
  • தற்போது 2 ரீசார்ஜ் திட்டத்தை மட்டுமே வைத்துள்ளது.
  • ஐபிஎல் தொடர் இதற்கு மறைமுக காரணம் என கூறப்படுகிறது.
சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா? title=

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இன்டர்நெட், வாய்ஸ் கால்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியை சேர்த்து ரீசார்ஜ் செய்யும் வகையில் சேவை அளித்து வருகிறது. அதாவது, நீங்கள் இன்டர்நெட், வாய்ஸ் கால்களுக்கு ரீசார்ஜ் செய்யும்போது, சற்று கூடுதலாக கட்டணம் செலுத்தினால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியின் சந்தாவையும் பெறலாம். இது, வழக்கமாக சந்தா தொகையை விட சற்று குறைவாகவும் இருக்கும். 

அந்த வகையில் மொத்தம் 12 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் அளித்து வந்தது.  151 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 119 ரூபாய் வரை இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த 12 திட்டங்களை 2 ஆக குறைத்துள்ளது. இந்த இரண்டும் புதிய திட்டங்களாகும். 

1,499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

தினமும் 2GB இணையத்தை 84 நாள்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஆக மொத்தம் 168GB. தொடர்ந்து, இதில் அன்லிமிடெட் வாய்ஸ்கால், எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட ஜியோ சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், ஓராண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். https://zeenews.india.com/tamil/topics/disney-hotstar

மேலும் படிக்க | Amazon Offer: டேட்டா வேகம் ஜெட் வேகத்தில் இருக்கும் 5G ஸ்மார்ட்போன்; அமேசானில் வெறும் ரூ.649

4,199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

தினமும் 3GB இணையத்தை 365 நாள்களுக்கு பயன்படுத்தலாம். மொத்தம் 1095GB. இதிலும், அன்லிமிடெட் வாய்ஸ்கால், எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட ஜியோ சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், ஓராண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். 

ஜியோ நிறுவனம் நிறுத்திய ரீசார்ஜ் திட்டங்கள்

- ரூ. 151 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் Data Add-on ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 333 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 499 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 555 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் Data Add-on ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 583 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 601 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 659 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் Data Add-on ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 783 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 799 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 1,066 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 2,999 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

- ரூ. 3119 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

ஏன் இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டன

இதுகுறித்து, ஜியோ நிறுவனம் எவ்வித தகவல்களையும் வெளியிடாத நிலையில், இத்திட்டங்கள் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரினால், எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ஐபிஎல் தொடரின், ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இழந்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுக்கான ஓடிடி ஒளிபரப்பு உரிமையை வியாகாம் 18 (Voot App) கைப்பற்றியிருந்தது. ஐபிஎல் உரிமத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இழந்ததால், ஜியோ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மொபைல் தொலைந்தால் GPay, Paytm-ஐ பிளாக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News