3 GB தினசரி டேட்டாவுடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் 3 ப்ரீபெய்ட் வகைகளில் கிடைத்து வந்தது.  இந்நிலையில் ஒரே ஒரு திட்டத்திற்கு மட்டும் டிஸ்னி ஹாட்ஸ்டாரை பயன்படுத்தும் வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை குறைத்துள்ளன.  கடந்த செப்டம்பர் மாதம் டிஸ்னி ஹாட்ஸ்டார் புதிய திட்டங்களை அறிவித்தது.  இதன் மூலம் டிஸ்னி ஹார்ட் ஸ்டாரின் விலை மேலும் 100 ரூபாயாக அதிகரித்தது.  இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ஏர்டெல் ஜியோ வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்ட உயர்வை அறிவித்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ Jio-Airtel-Vi இன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் இவையே! Benefits என்ன


வோடபோன் மட்டும் தான் அதன் திட்டங்களை மாற்றாமல் உள்ளது.  இவை அனைத்து திட்டங்களுடனும் 1 வருட இலவச Disney+ Hotstar சப்ஸ்க்ரிப்ஷனையும், நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி வரையிலான டேட்டா இணைப்பையும் வழங்குகிறது.  இதன் 4 திட்டங்களை அறிமுகம் செய்தது.  56 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.501 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 3 GB டேட்டா மற்றும் 1 வருட Disney+ Hotstar சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்.  ரூ.701 க்கு இந்த திட்டம் வழங்கப்படுகிறது, இவை ரூ.501 திட்டத்தை போலவே அம்சங்களை கொண்டுள்ளது.  84 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.901, அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 3 GB டேட்டா365 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.2595 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 1.5 GB டேட்டா.



முன்னர் ஏர்டெல் நிறுவனம் மூன்று வகையான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டிருந்தது.  28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.499 க்கு  அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 3 GB டேட்டா,  56 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.699 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 2 GB டேட்டா,  365 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.2798 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 2 GB டேட்டா.  தற்போது ஏர்டெல் நிறுவனம் அதன் ரீசார்ஜ் திட்டங்களை மாற்றிய பிறகு ரூ.599 க்கு  28 நாட்கள் வேலிடிட்டி,  அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 3 GB டேட்டா வழங்கப்பட்டுள்ளது.  


ஜியோ நிறுவனம் 28 வேலிடிட்டியுடன் ரூ.499 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 3 GB டேட்டா.  56 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ. 666 அன்லிமிடெட் அழைப்புகள், 100 SMS, 2  GB டேட்டா, மேலும், ஜியோ ரூ.888 ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது,  இது 2 GB தினசரி டேட்டாவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது,   கடைசியாக, ஜியோ ரூ.2599 மதிப்பிலான வருடாந்திர திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.


ALSO READ விலை உயர்வுக்குப் பிறகு, Jio, Airtel, Vi இன் மலிவான திட்டங்கள் இவைதான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR