இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளைச் சேர்க்கும் வகையில் மூன்று அதிரடி திட்டங்களை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் அதன் மறுசீரமைக்கப்பட்ட வரிசையில் மூன்று புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை சேர்த்தது, மேலும் இந்த திட்டத்தில் ஏர்டெல் நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ள எண்களுக்கான அழைப்புகளுக்கான நியாயமான பயன்பாட்டுக் கொள்கையை (FUP) நீக்கியுள்ளது. 


மேலும் தொழில்நுட்ப செய்திகளை படிக்க... இங்கே கிளிக் செய்யவும்


இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் விரை முறையே ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.449 என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புது திட்டங்கள் இப்போது புதிய ரீசார்ஜ் விருப்பங்களின் ஒரு பகுதியாக உருமாறியுள்ளது. குறித்த இத்திட்டங்கள் முறையே 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் விருப்பங்களில் கிடைக்கின்றன. 


இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளைச் சேர்க்க புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளை மறுசீரமைப்பதாக அம்சத்தினை வோடபோன் ஐடியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் விதமாக இந்த அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.


மேலும் தொழில்நுட்ப செய்திகளை படிக்க... இங்கே கிளிக் செய்யவும்


இந்த புதிய பட்டியலின் படி ரூ.219 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 1 GB மொபைல் தரவு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS அம்சங்களை அளிக்கும். அதனுடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் ஏர்டெல் விங்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாக்களையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் உள்ளிட்ட பிற நெட்வொர்க்குகளுக்கான அனைத்து குரல் அழைப்புகளும் முற்றிலும் இத்திட்டத்தில் இலவசமாகும்.


ரூ.399 திட்டத்திம் ஆனது 56 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் ஒரு நாளைக்கு 100 SMS அம்சங்களை அளிக்கும். மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் ஏர்டெல் விங்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாக்களையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் உள்ளிட்ட பிற நெட்வொர்க்குகளுக்கான அனைத்து குரல் அழைப்புகளும் முற்றிலும் இத்திட்டத்தில் இலவசமாகும்.


மேலும் தொழில்நுட்ப செய்திகளை படிக்க... இங்கே கிளிக் செய்யவும்


ரூ.399 திட்டத்திம் ஆனது 56 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் ஒரு நாளைக்கு 99 SMS அம்சங்களை அளிக்கும். மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் ஏர்டெல் விங்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாக்களையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் உள்ளிட்ட பிற நெட்வொர்க்குகளுக்கான அனைத்து குரல் அழைப்புகளும் முற்றிலும் இத்திட்டத்தில் இலவசமாகும்.


மேலும் தொழில்நுட்ப செய்திகளை படிக்க... இங்கே கிளிக் செய்யவும்


மேலும் ஒரு சிறப்பம்சமாக Rs 399 மற்றும் Rs 449 திட்டத்தில் Airtel Xstream Premium அம்சம் கூடுதலாக கிடைக்கிறது. அதேவேளையில் Airtel Money பயன்படுத்தி வாகனங்களுக்கான FASTag வாங்கினால் Rs 150 வரை பணம் திரும்ப பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.