ஏர்செல்லை அடுத்து சர்சையில் சிக்கிய ஏர்டெல்!
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்கள் மானியத் தொகையை பேமெண்ட் வங்கி கணக்கிற்கு மாற்றியது தொடர்பாக ரிசர்வ் வங்கி தற்போது ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்கள் மானியத் தொகையை பேமெண்ட் வங்கி கணக்கிற்கு மாற்றியது தொடர்பாக ரிசர்வ் வங்கி தற்போது ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏர்செல் நிறுவனம் இந்த மாதம் மார்ச் 15-ம் தேதியுடன் முழுவதுமாக தனது சேவையை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்குள் தங்களுக்கு விரும்பிய சேவையை தேர்வு செய்துகொள்ளும்படியும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அரசு வழங்கிய மானிய தொகையை தனது ஏர்டெல் பேமண்ட் வங்கியில் மாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.
ஆதார் மின்னணு சரிபார்ப்பு சேவையினை முறைகேடாக பயன்படுத்தி கோடி கணக்கில் பேமெண்ட் வங்கி கணக்குகளில் ரூ.167 கோடி பணத்தை வரவாக வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, தங்கள் பேமெண்ட் வங்கிக்கு மானிய தொகை வராததால்,சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில்,23 லட்சம் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது ரூ.47 கோடியை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஏர்டெல் நிறுவனத்திற்கு ஆதார் மின்னணு சரிபார்ப்பு சேவையில் இருந்து இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி விசாரணை மேற்கொண்டது. தற்போது ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏர்டெல் டிஜிட்டல் மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் தோல்வி அடைந்துள்ளதால் இனிமேல் ஏர்டெல் DTHல் ஸ்டார் குறித்த எந்த சேனலும் இடம்பெறாது என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இன்று முதல் அனைத்து ஸ்டார் சேனல்களும் அதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் பிளஸ், ஆசியாநெட், நேஷனல் ஜியாக்ரபி, விஜய் டிவி மற்றும் ஸ்டார் ஜலசா ஆகிய சேனல்கள் ஏர்டெல் DTH ல் இருந்து நீக்கப்படுகிறது. இந்த சேனல்கள் தேவைப்படுபவர்கள் நேரடியாக ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம்.
இன்று முதல் ஏர்டெல் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தனித்தனி ஸ்டார் சேனல்களுக்கும் தனித்தனியாக பணம் கட்டி பார்த்து கொள்ள வேண்டும். எனினும் இது தற்காலிகமானது என்றும் விரைவில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.