ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்: ஏர்டெல் நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று. ஏர்டெல்லுக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். சில காலத்திற்கு முன்பு, ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் தனது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியது. அதன் பிறகு மொபைல் வாடிக்கையாளர்கள் பலர் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் அதன் பயனர்களின் வெவ்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப, வெவ்வேறு பிரிவுகளில் பல வகையான திட்டங்களை வழங்குகிறது. அவை வரம்பற்ற அழைப்புகள், டேட்டா, ஒடிடி பலன்கள் என பல்வேறு வகையான வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன. இவை வேலிடிட்டி காலம், தரவு மற்றும் பிற அம்சங்களைப் பொறுத்து மாறுபடும். இதில் குடும்ப ரீசார்ஜ் திட்டங்களும் அடங்கும். குடும்ப ரீசார்ஜ் திட்டத்தில்,  குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் முலம் பயனை அடையலாம். இதில், ஒரு பிளானில் 4 சிம் கார்டுகள் கிடைக்கும். அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர இரண்டு போஸ்ட்பெய்டு குடும்ப ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்றின் கட்டணம் ரூ.1199, மற்றொன்றின் கட்டணம் ரூ.1399. 


ரூ.1199 ரூபாய் ஃபேமிலி பிளான்


வெறும் 1199 ரூபாய் கட்டணத்தில், உங்கள் குடும்பத்திற்கு நான்கு மொபைல் எண்களைப் பெறலாம். அதாவது ஒரு ரீசார்ஜ் மூலம் நான்கு பேர் போனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில், பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 190 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இதில் முதன்மை சிம் கார்டு இணைப்புக்கு 100 ஜிபி டேட்டாவும், மீதமுள்ள மூன்று இணைப்புகளுக்கு தலா 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் 6 மாதங்கள் அமேசான் பிரைம் (Amazon Prime( மற்றும் ஒரு வருடம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar)  ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச மொபைல் சந்தா வசதியும் உண்டு. கூடுதலாக, நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக்கை முழுமையாக அனுபவிக்க முடியும்.


மேலும் படிக்க | BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!


ரூ.1399 ரூபாய்க்கள் ஃபேமிலி பிளான்


குடும்ப உறுப்பினர்களுக்கான ரூ.1399 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறலாம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் முதன்மை இணைப்புக்கு 150 ஜிபி மற்றும் 3 கூடுதல் இணைப்புகளுக்கு 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளாக, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், பிளே விங்க் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றின் இலவச மொபைல் சந்தா கிடைக்கும்.


ஏர்டெல்லின் குடும்ப பிளான் மூலம் நீங்கள் வரம்பற்ற அழைப்பு வசதியுடன், தாரளமாக இணையத்தைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் பலவற்றையும் ரசிக்க முடியும். இவை அனைத்தும் எந்த கட்டணமும் இல்லாமல் கிடைக்கும். உங்கள் குடும்பத்திற்கான ஒரு நல்ல திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த ஏர்டெல் திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.


மேலும் படிக்க | அட்டகாசமான விலையில் சாம்சங் கேலக்ஸி A55 5G ஸ்மார்ட்போன்! நவீன தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ