ஏர்டெல்லின் ரூ.9 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங், மற்றும் 100 எஸ்.எம்.எஸ், 100 எம்பி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோவுடன் ஒப்பிடும் போது ஏர்டெல்லின் சேவை சிறந்ததாக உள்ளது. 


ஜியோ வருகைக்கு பின், ஜியோ உடனான போட்டியில் மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அதிகளவு வழங்கியது. இருப்பினும் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது.


அதில் ஏர்டெல் மற்றும் ஐடியா சமாளித்து வருகிறது. ஏர்செல் பெரும் நஷ்டத்தை சந்தித்தால், சமீபத்தில் 6 மாநிலங்களில் சேவையை  நிறுத்தியதாக செபி அதிகாரபூர்வமாக தெரிவித்தது.


இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் ரூ .9 மற்றும் ரூ. 23க்கு அற்புத பிளான்களை அறீமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் கிடைக்கும். இது ஏர்டெல் காம்போ ஆஃபர் பகுதியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. 


ஏர்டெல்லின் ரூ.9 . ரீ-சார்ஜ் செய்த தேதி முதல் அன்லிமிட்டெட்ட உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங், மற்றும் 100 எஸ்.எம்.எஸ், 100 எம்பி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஆனால், ஜியோவின் ரூ.19 திட்டத்தில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 20 எஸ்எம்எஸ், 150 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. 


அதேபோல் ஏர்டெல் வழங்கும் ரூ.23 ரீ-சார்ஜ் செய்த தேதி முதல் அன்லிமிட்டெட் அழைப்புகள், 200 எம்பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


இந்த இரண்டு அற்புத திட்டத்தால், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். மேலும் இந்த திட்டம் முழுக்க முழுக்க ஜியோவிற்கு போட்டியாக அமைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.