ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா கேப் எதுவும் இல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.  சமீபத்தில் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏர்டெல் 5ஜி பிளஸ் கவரேஜ் பகுதியில் வசிக்கும் ஏர்டெல் பயனர்கள் தங்கள் 5ஜி இயக்கப்பட்ட மொபைலில் அன்லிமிடெட் இணையத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.  ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும்போது எப்படி செய்ததோ அதைப்போலவே தான் ஏர்டெல் நிறுவனமும் செய்கிறது.  ஆனால் இந்த முறை ஏர்டெல் ஜியோவை விட ஒரு படி மேலே சென்று இப்போது நாடு முழுவதும் அதன் 5ஜி சேவாய்யை விரிவுபடுத்தும் நோக்கில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சாட்ஜிபிடி பிளஸ் இந்தியாவுக்கு வந்தாச்சு..! அணுகலை பெறுவது எப்படி?



ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் கவரேஜ் பகுதியில் உள்ள அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் 5ஜி சேவையை இலவசமாகப் பெறலாம்.  அதேசமயம் வாடிக்கையாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும் மற்றும் அவர்களது ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி சேவையை இயக்கியிருக்க வேண்டும்.  அன்லிமிடெட் 5ஜி டேட்டாவைப் பெற ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸுக்குச் சென்று, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.  நீங்கள் வசிக்கும் நகரத்தில் 5ஜி நெட்வொர்க் கிடைத்தாலும் நெட்வொர்க்கைப் பெற முடியாவிட்டால், ஏர்டெல் தேங்ஸ் ஆப்பிற்கு சென்று உங்களது பிரச்னையை சரிசெய்து கொள்ளலாம்.  ஏர்டெல் 5ஜி பிளஸ் தற்போது 270-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. 


ஏர்டெல் ரூ.239 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையில் டேட்டாவுடன் கூடிய அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.  ரூ.239, ரூ.265, ரூ.296, ரூ.299, ரூ.319, ரூ.359, ரூ.399, ரூ.455, ரூ.479, ரூ.489, ரூ.499, ரூ.509, ரூ.519, ரூ.549, ரூ.666, ரூ.699, ரூ.719, ரூ.779, ரூ.839, ரூ.999, ரூ.1799, ரூ.2999 மற்றும் ரூ.3359 போன்ற விலைகளில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது.  இந்த திட்டங்களில் சில அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தா போன்ற ஓடிடி நன்மைகளும் கிடைக்கிறது.  ஏர்டெல் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.  ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.399, ரூ.499, ரூ.599, ரூ.999, ரூ.1199 மற்றும் ரூ.1499 ஆகிய விலைகளில் கிடைக்கிறது.  ரூ.499 முதல் ரூ.1499 வரையிலான திட்டங்களில் அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தாக்கள் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | ரூ. 269 ரீசார்ஜ், அன்லிமிடெட் கால்ஸ், அன்லிமிடெட் டேட்டா: அசத்தும் BSNL


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ