Free Netflix Airtel Prepaid Plan: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது முன்னணியில் உள்ளன. முன்னொரு காலத்தில் பல நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் தற்போது ஜியோவின் பெரும் ஆதிக்கத்தில் ஏர்டெல் நிறுவனமே சரிக்கு சமமாக போட்டியிடுகிறது எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொலைத்தொடர்பு துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க வோடபோன் நிறுவனமும், ஐடியா நிறுவனமும் ஒன்றிணைந்து வோடபோன் ஐடியா என்றாகியது. பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க பல ஆப்பர்களை வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே இந்தியாவில் 5ஜி சேவையை அளித்து வருகின்றன. அதுவும் 5ஜி சேவையை வரம்பற்ற வகையில் இந்நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 


இலவச ஓடிடி திட்டம் 


வோடபோன் ஐடியா 4ஜி சேவையை நீண்ட நாள்களாக வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு நிறுவனங்களும் பல ஆப்பர்களையும் தள்ளுபடிகளை அள்ளி வீசி வருகின்றன. இப்போது டேட்டா சார்ந்த ரீசார்ஜ் பிளான்களே அதிகம் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதில் சலுகைகளையும் பல நிறுவனங்கள் வழங்குகின்றன. 


மேலும் படிக்க | பிஎஸ்என்எல் வாய்ஸ் பிளஸ் டேட்டா பிளான்கள்! எல்லாமே 80 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி


அதிலும் ரீசார்ஜ் பிளான்களுக்கு கூடுதல் பலன்களாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடிகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, இதனாலும் வாடிக்கையாளர்கள் கவரப்படுகிறார்கள். அந்த வகையில், ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தினால், 84 நாள்களுக்கு நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும். 


இந்த பிளானின் பலன்கள்


இப்போது நெட்பிளிக்ஸில் பாஸ்வேர்டை பகிர்வதில் பல கட்டுப்பாடுகள் வந்துவிட்டதால் சலுகை விலையில் இதுபோல் கிடைக்கும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி பல்வேறு மொழித் திரைப்படங்கள், வெப் சீரிஸ், ஆவணப்படம் என பல வகைகளில் இருக்கும். சினிமா பிரியர்களும், இளைஞர்களும் நெட்பிளிக்ஸை அதிகம் விரும்புகின்றனர் எனலாம். அந்த வகையில், நெட்பிளிக்ஸை இலவசமாக வழங்கும் ஏர்டெல்லின் அந்த ரீசார்ஜ் திட்டத்தை இங்கு காணலாம். 


இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையை பார்க்கும் முன் இதில் கிடைக்கும் வேறு பலன்களை முதலில் காணலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள்களாகும். இந்த திட்டத்தில் உங்களுக்கு ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கும். 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும், அதுவும் தினமும். இந்த பலன்களுடன் அப்போல்லா 24x7 Circle, இலவச ஹலோ ட்யூன்ஸ், வின்க் மீயூசிக் தளத்தின் அணுகல் ஆகியவை கிடைக்கும். 


ரீசார்ஜ் பிளானின் விலை...


அதுமட்டுமின்றி 5ஜி வரம்பற்ற டேட்டாவும் கிடைப்பதால் நீங்கள் சலிக்காமல் நெட்பிளிக்ஸில் படங்களை பார்த்து தள்ளலாம். நெட்பிளிக்ஸ் Basic பிளான் சந்தாவின் இலவச அணுகல் 84 நாள்களுக்கு உங்களுக்கு கிடைக்கும். இந்த Basic பிளானை நெட்பிளிக்ஸ் நிறுவனமே அதன் உறுப்பினர்களுக்கு நேரடியாக வழங்குவதில்லை. இதில் Standard Definition (SD) வீடியோ குவாலிடிட்டியில் குறைவான பணம் கொடுத்து நிறைய பணத்தை பார்க்கலாம். மேலும், இந்த நெட்பிளிக்ஸ் பிளான் ஒரே ஒரு சாதனத்தில் மட்டுமே கிடைக்கும். குறைந்த விலையில் நிறைய படங்களை நீங்கள் பார்க்கலாம். 84 நாள்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டாவுடன் நெட்பிளிக்ஸ் Basic பிளானையும் தரும் இந்த ரீசார்ஜ் பிளானின் விலை ரூ. 1499 ஆகும். 


மேலும் படிக்க | Bajaj Pulsar 400 : கெத்தா வரப்போகுது ப்ரீமியம் பைக் பஜாஜ் பல்சர் 400! மே 3 குறிச்சு வச்சுக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ