கடந்த சில நாட்களாக பயன்பாட்டில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட ₹100 ப்ரிபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தினை மீண்டும் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டுவந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புதிய திட்டத்தின் படி ₹100-க்கு ரீசார்ஜ் செய்தால், ₹81.75 உடன் கூடிய லைப்டைம் வேலிடிட்டி மற்றும் 28 நாட்களுக்கான எல்லையில்லா அவுட்கோயிங் வசதி வழங்கப்படும்.


அதேப்போல் ₹500-க்கு ரீசார்ஜ செய்தால், ₹420 உடன் கூடிய லைப்டைம் வேலிடிட்டி மற்றும் 20 நாட்களுக்கு எல்லையில்லா அவுட்கோயிங் வசதி வழங்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.



ஜியோ அளித்தக் கடுமையான போட்டியால் தொடர்ந்து புதிய ப்ரீபெய்டு திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்தவகையில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்கள் இந்த புதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளது.


இந்தப் புதிய ப்ளான்கள் வெறும் டாக்டைம்-க்கு மட்டுமே வசதியாக உள்ளது. எஸ்.எம்.எஸ், டேட்டா ப்ளான் போன்ற அம்சங்கள் குறித்து ஏர்டெல் எவ்வித தகவல்களையும் குறிப்பிடவில்லை. சில நாள்களுக்கு முன்னர் ஏர்டெல் ₹1,699 ரூபாய்க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. எல்லையில்லா டாக்டைம், எஸ்.எம்.எஸ் உடன் தினமும் ஒரு ஜிபி டேட்டா உடன் அளித்தது குறிப்பிடத்தக்கது.