ஏர்டெல் நிறுவனம், ஜியோவைப் போலவே ரீசார்ஜ் திட்டங்களில் சலுகைகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்து செயல் படுத்தி வருகிறது. குறைந்த விலையில் அதிக டேட்டா, அளவில்லா டேட்டா, கேஷ்பேக் ஆபர், என ஜியோவும்- ஏர்டெல்லும் மாறி மாறி வழங்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ரூ.98 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு செயல்படும் 1 ஜிபி டேட்டா,  நிபந்தனைகளுடன் கூடிய வாய்ஸ் காலிங் சேவையை வழங்கி வந்தது. 


தற்போது ரூ.98 க்கு ரீசார்ஜ் செய்வோருக்கும், 28 நாட்கள் செயல்படும் 5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கும் 100 இலவச குறுங்செய்திகள், அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கவுள்ளது.


ஜியோ நிறுவனம் இதே, ரூ. 98 ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு செயல்படும், 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் தோறும் 100 இலவச குறுங்செய்திகள், அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை வழங்கி வந்தது. தற்போது ஏர்டெல் நிறுவனம் ஜியோவை மிஞ்சும் அளவிற்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சேவை தற்போது Andhra Pradesh and Telangana வட்டாரத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.