அதிரடியான ஏர்டெல் புதிய சலுகை: Daily 1GB only Rs.93!!
குறைந்த விலையில் அதிரடியான சிறப்பு சலுகையை ஏர்டெல் வழங்கியுள்ளது.
ஏர்டெல் பிரீபெயிடு வாடிக்கையாளர்களுகாக புதிய சலுகை ஒன்றை ஜியோவின் ரூ.98 திட்டத்திற்கு போட்டியாக அறிவித்துள்ளது.
ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.93 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் கால், தினமும் 1 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை பத்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 1-ஜிபி டேட்டா திட்டம் அனைத்து சாதனங்களிலும் பொருந்தும் என்றும் 3-ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போரும் இதனை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர் பயன்படுத்தும் 2-ஜி, 3-ஜி அல்லது 4-ஜி ஸ்மார்ட்போன்களிலும் டேட்டா பயன்படுத்த முடியும். புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ ரூ.98 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளும், தேசிய ரோமிங், 140 எஸ்.எம்.எஸ். அதிவேக டேட்டா 2.1 ஜிபி சுமார் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
சலுகைகளை ஒப்பிடும் போது ஏர்டெல் திட்டம் சற்றே சிறப்பானதாக தெரிந்தாலும் ஜியோ சலுகையில் கூடுதல் டேட்டா வழங்குகிறது. சேவை அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களை விட ஜியோ 20%கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டி.வி., ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் டி.வி. மற்றும் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.