நடிகர் அஜித்துக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ட்விட்டரில் வாழ்த்து! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் செல்வா இயக்கத்தில் தல அஜித்தின் முதல் படம் அமராவதி. இப்படம் 1993 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4 ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி தற்போது சுமார் 25 வருடங்கலாகியுள்ளது. 


இதையடுத்து, திரையுலகில் தல அஜித்தின் வளர்ச்சியானது அனைவரையும் பிரமிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடிகர் அஜித்துக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம். அஜித் ‘வாழு, வாழ விடு’ என்ற வசனத்தை தன் ரசிகர்களுக்கு எப்போதும் கூறுவார். ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த 26 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் #26YrsOfUnparalleledAJITH என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், 26-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அஜித்துக்கு அவருடைய நீண்ட நாள் நண்பனும், விவேகம் படத்தின் வில்லனாக நடித்த விவேக் ஓப்ராய் தன்னுடைய வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


அந்த பதிவில் “என்னுடைய நண்பனும் மிகப் பெரிய ஆளுமையுமான அஜித் 26 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார். நண்பா உனக்கு என்னுடைய அன்பு. பிரமிக்க வைக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவாய் என்று நம்புகிறேன்” என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.