வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! BSNL இந்த 4 ரீசார்ஜ் பேக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது!
BSNL Recharge Plans: பிஎஸ்என்எல் நிறுவனம் முறையே ரூ.71, ரூ.104, ரூ.135 மற்றும் ரூ.395 போன்ற நான்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களின் சேவைகளை அதிரடியாக நீக்கியுள்ளது.
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது திட்டங்களில் பல புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரையில் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த நான்கு திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. அந்த நான்கு புதிய ரீசார்ஜ் திட்டங்கள் முறையே ரூ.71, ரூ.104, ரூ.135 மற்றும் ரூ.395 போன்ற திட்டங்களாகும். இந்த நான்கு திட்டங்களினால் பெரிதளவில் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பயனில்லை, இதன் காரணமாகவே நிறுவனம் இந்த திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் அதன் வாடிக்கைகையாளர்களுக்கு 5ஜி நெட்வொர்க்கை வழங்க தயாராகி வருகிறது. இந்நிலையில் நிறுவனம் சில புதிய ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு நண்மைகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Cyber: கூகுளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க வழி! ரகசியத்தைக் காப்பாற்றும் டிப்ஸ்
பிஎஸ்என்எல் ரூ 71 திட்டம்:
ரூ.71 ரீசார்ஜ் திட்டமானது ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 30 பைசா வசூலித்தது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளோ அல்லது இலவச செய்திகளோ செய்ய முடியாது. வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு ரூ.20 பயன்பாட்டு மதிப்பை பெறுகிறார்கள், இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கூடுதல் நன்மைகளும் கிடைக்கவில்லை.
பிஎஸ்என்எல் ரூ 104 திட்டம்:
ரூ.104 ரீசார்ஜ் திட்டமானது 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் ரூ.99 மதிப்புள்ள சிறப்பு தள்ளுபடி கூப்பன் நன்மைகளும் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 135 திட்டம்:
ரூ 135 எஸ்டிவி திட்டமானது ஆன்-நெட்/ஆஃப்-நெட் உட்பட 1440 நிமிட அழைப்பு நேரத்தை வழங்குகிறது. இருப்பினும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா நன்மைகள் வழங்கப்படவில்லை, இது 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 395 திட்டம்:
இந்த திட்டம் 3000 நிமிட ஆன்-நெட் அழைப்பு மற்றும் 1800 நிமிட ஆஃப்-நெட் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும் இதற்கு வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 20 பைசா செலுத்த வேண்டும், 71 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா முடிந்ததும் இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படுகிறது.
மேலும் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்டிவி ரூ.269 மற்றும் ரூ.769 விலையில் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ரூ.269 மதிப்புள்ள திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்கள், ஜிங் ஆப் அணுகல் மற்றும் ஈரோஸ் நவ் சந்தா போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. ரூ.769 மதிப்புள்ள திட்டமானது அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் டியூன் அணுகல், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜிங் ஆப் அணுகல் மற்றும் ஈரோஸ் நவ் போன்றவற்றிற்கான அணுகலை வழங்குகிறது.
மேலும் படிக்க | வெறும் ரூ. 20,000-க்கு ஐபோன் 11: பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ