EPFO Update: இந்தியாவில் பணியாளர்களுக்கான உறுதியான நிதி ஆதாயத்தை வழங்குவதில் முக்கியமானது பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆகும்.  EPF ஊழியர்களுக்கு ஓய்வூதிய சேமிப்பு மற்றும் நிதி பாதுகாப்பை ஒருங்கே வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF கணக்கின் நிர்வாகத்தை எளிதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்ற, அரசாங்கம் உலகளாவிய கணக்கு எண் (UAN) என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், உங்கள் EPF கணக்கின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், முக்கிய அறிவிப்புகளைப் பெறவும், உங்கள் மொபைல் எண்ணை உங்கள் UAN எண் உடன் இணைக்க வேண்டும் என்பதும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அந்த வகையில் உங்களின் மொபைல் எண்ணை, உங்கள் EPF கணக்கின் UAN எண்ணுடன் எப்படி இணைப்பது என்பதை இதில் காணலாம். அதற்கு முன், UAN எண்ணை மொபைல் எண்ணுடன் இணைத்தால் கிடைக்கும் நன்மையை முதலில் பார்க்கலாம். 


UAN எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதன் நன்மை


1. இது உங்கள் EPF கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உங்கள் கணக்கை அணுக முடியும் என்பதை இது உறுதி செய்கிறது. 


2. EPFO பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் முக்கியமான புது, பரிவர்த்தனை எச்சரிக்கைகள் மற்றும் நினைவூட்டல்களை அனுப்புகிறது. இணைக்கப்பட்ட மொபைல் எண் இல்லாமல், முக்கியமான தகவல்களை நீங்கள் இழக்க நேரிடலாம்.


மேலும் படிக்க | EPF Withdrawal Rules: EPF தொகையில் அட்வான்சாக பணம் பெற முடியுமா? வழிமுறைகள் என்ன?


3. இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு, உங்கள் EPF கணக்கு தொடர்பான பல்வேறு ஆன்லைன் சேவைகளை அணுகலாம், அதாவது உங்கள் இருப்பைச் சரிபார்த்தல், உங்கள் பாஸ்புக்கைப் பதிவிறக்கம் செய்தல் ஆகியவற்றை எளிதாக அணுகலாம்.


4. ஒருவேளை, உங்கள் UAN கடவுச்சொல்லை மறந்துவிட்டால், அதை மீட்டமைக்க பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருப்பது அவசியம்.


UAN எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க இதை படிநிலைகளை பின்பற்றவும்:


- EPF இணையதளத்திற்கு முதலில் செல்லவும். பின்வரும் லிங்க்கை கிளிக் செய்தும் அந்த இணையதளத்திற்கு செல்லலாம். ( https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface /)


- உங்கள் EPF கணக்கில் உள்நுழையவும். கணக்கின் உள்ள செய்ய UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தவும்.


- உள்நுழைந்ததும், போர்ட்டலின் 'Manage' பகுதிக்குச் செல்லவும்.


- 'Contact Details' என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆப்ஷன் 'Manage' பிரிவில் தோன்றும். அதை கிளிக் செய்யவும்.


மேலும் படிக்க | EPF Withdrawal Rules: பணி ஓய்வுக்கு முன்னரே 100% இபிஎஃப் பணத்தை எடுக்க முடியுமா?


- உங்கள் தற்போதைய மொபைல் எண் பட்டியலைக் காண்பீர்கள். இது சரியானதா என்பதை உறுதிப்படுத்தவும். அப்படியானால், நீங்கள் அதை மாற்ற வேண்டியதில்லை.


- உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, 'Change Mobile Number' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.


- உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும். நீங்கள் உடனடியாக அணுகக்கூடிய எண் இது என்பதை உறுதிப்படுத்தவும்.


- உங்கள் புதிய மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். சரிபார்ப்புக்காக இந்த OTP-ஐ இணையதளத்தில் உள்ளிடவும்.


- OTP சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் மொபைல் எண் EPF தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படும். உறுதிப்படுத்தல் மெசேஜையும் பெறுவீர்கள்.


- பாதுகாப்பு நோக்கங்களுக்காக உங்கள் UAN கணக்கில் இருந்து லாக்-அவுட் செய்ய மறக்காதீர்கள்.


இதில் குறிப்பிடத்தக் விஷயம் என்னவென்றால், ஆன்லைன் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, உங்கள் ஆதார் எண்ணை உங்கள் EPF கணக்குடன் இணைக்க வேண்டும். உங்கள் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க உங்கள் பகுதியில் உள்ள EPFO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.


மேலும் படிக்க | வேலை மாற்றியபின் இபிஎஃப் கணக்கை மர்ஜ் செய்வது மிக அவசியம்: முழு செயல்முறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ