உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த 9 செயலிகள் இருந்தால் உடனே நீக்கவும். கூகுள் பிளே ஸ்டோர் (Google Play store) அவற்றை தடை செய்துள்ளது.  இதன் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகளை ஹேக் செய்யும்  சாப்ட்வேர் பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பட்டியலிடப்பட்ட இந்த ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்திருந்தால் அதனை உடனே நீக்கி விடவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகுள் ப்ளே ஸ்டோர் தடை செய்துள்ள  9 செயலிகள்  


சில செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் தடை செய்துள்ளது. இந்த செயலிகள் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடலாம். அவர்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற உங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து தகவல்களைத் திருடலாம். இதன் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கூட எடுக்க முடியும்.  இப்போது, ​​கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 9 செயலிகளை அடையாளம் கண்டு தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த செயலிகள் இருந்தால் உடனடியாக அதை நீக்கவும்.


Flytrap உலகம் முழுவதும் பரவி வருகிறது


Zimperium நிறுவனத்தின்  zLabs ஆராய்ச்சியாளர்கள் Flytrap  என்ற ஆபத்தான ப்ரோகிராமை அடையாளம் கண்டுள்ளனர். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் வங்கி விபரங்கள் உள்ளிட்ட தனிப்ப்ட்ட தரவுகளை ஹேக் செய்யலாம்.


ALSO READ: Jio அட்டகாச ரீசார்ஜ் பிளான்கள்: ரூ.98-ல் 21GB தரவு, வரம்பற்ற அழைப்பு, இன்னும் பல நன்மைகள்


ஸ்மார்ட்போன்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய 9 தீங்கிழைக்கும் செயலிகளின் பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.


1. ஜிஜி வவுச்சர் (GG Voucher)
2. வோட் பார் யூரோப்பியன் புட் பால் (Vote European Football ) 
3. ஜிஜி கூப்பன்  ஆட்ஸ்  (GG Coupon Ads)
4. application.app_moi_6: GG Voucher Ads
5. com.free.voucher: GG Voucher
6. சாட்பியூயல் (Chatfuel)
7. நெட் கூப்பன் (Net Coupon)
8. com.movie.net_coupon: Net Coupon
9. யூரோ 2021 அபிஷியல் (EURO 2021 Official)


மேலே குறிப்பிட்டுள்ள செயலிகள் உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்தால், அதனை உடனடியாக நீக்கவும்.


ALSO READ: உங்களிடம் Airtel சிம் உள்ளதா? இப்படி செய்தால், ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR