Reliance Jio-ன் இலவச திட்டம், கால நீட்டிப்பு திட்டத்தினை அடுத்து BSNL தனது அனைத்து கோம்போ திட்டங்களிலும் 2GB கூடுதல் டேட்டா-வினை வழங்க திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Jio, Vodafone மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டிப் போடும் வகையில் BSNL தற்போது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக தனது தற்போதைய பிளான்கள் அனைத்திலும் 2GB கூடுதல் டேட்டா-வினை வழங்கவுள்ளது,


அந்த வகையில்., Unlimited Combo திட்டங்களான  Rs 999, Rs 666, Rs 485, Rs 429 மற்றும் Rs 186 மதிப்பிலான திட்டங்களில் கூடுதலாக 2GB மொபைல் டேட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதேப்போல் 3G Data STV திட்டங்களான Rs 448, Rs 444, Rs 333, Rs 349 மற்றும் Rs 187 மதிப்பிலான திட்டங்களில் கூடுதலாக 2GB மொபைல் டேட்டா வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்த இலவச டேட்டா முடிவடைந்த பின்னர் மொபைல் டேட்டாவினை பயனர்கள் 40Kbps வேகத்தில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.


முன்னதாக FIFA உலக கோப்பை போட்டிகளை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அசர வைக்கும் சலுகையினை BSNL அறிவித்தது. அதன்படி Rs 149-க்கு ரீஜார்ஜ் செய்தால் 4GB மொபைல் டேட்டா கிடைக்கும் எனவும், இந்த டேட்டாவினை 28 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. அதேவேலையில் இந்த திட்டத்தினை ஜூன் 14 - ஜூலை 15 ஆகிய காலக்கட்டத்தில் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அறிவித்தது.


இந்நிலையில் தற்போது தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், இதர டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டிப் போடும் விதமாகவும் இந்த கூடுதல் 2GB டேட்டா திட்டத்தினை தற்போது BSNL அறிவித்துள்ளது.