அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் பயனர்களுக்கு குறைந்த விலையில் பல கவர்ச்சிகரமான பலன்களை வழங்க விரும்புகின்றன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களையும் கூடுதல் பலன்களையும் அவ்வப்போது வழங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் உதவியுடன் உங்கள் மின்சாரக் கட்டணம், எரிவாயு கட்டணம், ஸ்விக்கி-சொமேடோ பில்கள் போன்றவற்றில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். அதைப் பற்றி இந்த பதிவில் மேலும் தெரிந்து கொள்ளலாம். 


ஏர்டெல் அளிக்கும் மிகசிறந்த வாய்ப்பு


ஏர்டெல் சமீபத்தில் ஆக்சிஸ் வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து புதிய கோ பிராண்டட் கிரெடிட் கார்டு, 'ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம், ஏர்டெல்லின் அனைத்து பயனர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகள் வழங்கப்படுகின்றன.


மின் கட்டணம் குறைக்கப்படும்


நீங்கள் ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மின்சாரம், தண்ணீர் அல்லது கேஸ் கட்டணங்களை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் செலுத்தினால், உங்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கும். மேலும், மற்ற அனைத்து செலவுகளுக்கும் 1% கேஷ்பேக் கிடைக்கும். மேலும், பிக் பாஸ்கட், ஸொமேடோ மற்றும் ஸ்விக்கி ஆகியவற்றில் இந்த கார்டைப் பயன்படுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும். ஏர்டெல்லின் டிடிஎச், ரீசார்ஜ் அல்லது ஃபைபர் திட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், உங்களுக்கு 25% கேஷ்பேக் கிடைக்கும்.


மேலும் படிக்க | அற்புதமான சாம்சங்கின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் 


இலவச அமேசான் கூப்பன் கிடைக்கும்


நீங்கள் ஏர்டெல் பயனராக இருந்து, ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் இருந்தால், ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கார்ட் உங்களுக்கு வழங்கப்பட்டவுடன், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானிலிருந்து உங்களுக்கு இலவச வவுச்சர் வழங்கப்படும். 500 ரூபாய் மதிப்புள்ள இந்த வவுச்சரை 30 நாட்களுக்குள் பயன்படுத்தலாம்.


ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


இந்த கார்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஏர்டெல் பயனராக இருந்தால், ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிகக் | டேட்டிங் செய்பவர்களுக்கு சூப்பர் வசதியை வழங்கும் Tinder App


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR