Amazon Sale: இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த ஷாப்பிங் முறை மிகவும் விரும்பப்படுகிறது, ஏனெனில் இது எளிதானதாக இருப்பதோடு வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருட்கள் மற்றும் சாதனங்களில் அற்புதமான சலுகைகளும் கிடைக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் தங்கள் பயனர்களுக்கு அவ்வப்போது பல தள்ளுபடிகளையும் சலுகைகளையும் கொண்டு வருகின்றன. இவற்றுக்காக வாடிக்கையாளர்களும் மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


ரெட்மியின் (Redmi) 4ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கும் அமேசானின் அத்தகைய ஒரு சலுகையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்தச் சலுகையின் மூலம் இந்த போனை ரூ.500க்கும் குறைவான விலையில் வாங்க முடியும்.


500 ரூபாய்க்குள் ரெட்மி ஸ்மார்ட்போனை வாங்கலாம்


Redmi 9-ன் விலை ரூ.10,999 ஆகும். ஆனால் இந்த போனை அமேசானில் ரூ.500-க்கும் குறைவான விலையில் வாங்கலாம். இவ்வளவு குறைந்த விலையில் இந்த போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


இந்த போனில், அமேசான் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 18% தள்ளுபடி வழங்குகிறது. இதன் காரணமாக அதன் விலை ரூ.8,999 ஆக குறைந்துள்ளது. இந்த அமேசான் டீலில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது.


ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 


உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக Redmi 9-ஐ வாங்கினால், ரூ.8,500 வரை நீங்கள் சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனும் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்தால், இந்த ரெட்மி போனின் விலை வெறும் ரூ.499 ஆக குறைந்துவிடும். இந்த அமேசான் டீலில் வாடிக்கையாளர்களுக்கு நோ-காஸ்ட் EMI மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.


இந்த போனின் சிறப்பு என்ன?


Redmi 9 ஸ்மார்ட்போன் 4G சேவைகளை ஆதரிக்கிறது. இந்த போனில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். 2.3GHz MediaTek Helio G35 octa கோர் செயலியில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு டூயல் சிம் போன் ஆகும். இது 6.53 இன்ச் HD + IPS டிஸ்ப்ளேவுடன் வருகிறது.


இதில் 5எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 13எம்பி மெயின் சென்சார் பின்புற கேமராவும் கிடைக்கும். பேட்டரியைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh வலுவான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதில் 10W வயர்டு சார்ஜரையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.


அமேசான் (Amazon) வழங்கும் இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சேல் என தனியாக இல்லாவிட்டாலும், ‘அமேசான் டீல் ஆஃப் தி டே’ மற்றும் ’லிமிடெட் டைம் டீல்கள்’ போன்ற பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.


ALSO READ: ரகசியமாக வெளியானது Vivo மாஸ் ஃபோன், அதிரடி அம்சங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR