ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வருகிறது Motorola Edge 30 Pro: அசத்தும் அம்சங்கள் இதோ
மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவை இந்த மாதம் அதாவது பிப்ரவரியில் அறிமுகப்படுத்தக்கூடும்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவை இந்த மாதம் அதாவது பிப்ரவரியில் அறிமுகப்படுத்தக்கூடும். நிறுவனம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் அளிக்கவில்லை என்றாலும், இந்த போன் குறித்து பல விஷயங்கள் கசிந்துள்ளன. சிறந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ அறிமுகம் செய்யப்பட உள்ளது
இந்த மோட்டோரோலா (Motorola) போன் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படக்கூடும். ஆனால் அறிமுக தேதி தற்போது வெளியிடப்படவில்லை என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது. மோட்டோரோலா கடந்த மாதம் மோட்டோரோலா எட்ஜ் X30 ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ அதே ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.
பெயர் மாற்றம் இருக்கும்
91Mobiles இன் அறிக்கையின்படி, மோட்டோரோலா, மோட்டோரோலா எட்ஜ் X30 ஐ சீனாவில் (China) அறிமுகப்படுத்தியது. இப்போது மோட்டோரோலா, மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தப் போகிறது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போனுக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ வடிவமைப்பில் சிறிய வித்தியாசம் இருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வேறு பெயரில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Motorola Edge 30 Pro: அம்சங்கள்
நாம் முன்பே குறிப்பிட்டது போல, இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் குறித்த எந்த தகவலையும் நிறுவனம் தற்போது வெளியிடவில்லை. எனினும், மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ சீனாவில் வெளியிடப்படும் மோட்டோரோலா எட்ஜ் X30 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கருதினால், இரண்டு தொலைபேசிகளின் அம்சங்களிலும் அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. மோட்டோரோலா எட்ஜ் X30 இன் அம்சங்களைப் பற்றி காணலாம்.
ALSO READ | மிகக்குறைந்த விலையில் iPhone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு
மோட்டோரோலாவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே
Motorola Edge X30 ஆனது 6.7-இன்ச் முழு HD+ POLED டிஸ்ப்ளே, 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR10+ ஆதரவுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகையால் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவும் இதே போன்ற டிஸ்ப்ளே அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கருதலாம். இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் (Smartphone) குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 SoC சிப்செட்டில் வேலை செய்ய முடியும் என்றும், இதில் 12ஜிபி வரை ரேம் பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.
கேமரா மற்றும் பேட்டரி
கேமராவைப் பற்றி பேசுகையில், மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரக்கூடும். இதில் 50MP முதன்மை சென்சார், 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை இருக்கும். முன் கேமராவைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் 60MP முன் கேமராவைப் பெறலாம். இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவின் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான சில தகவல்களை மோட்டோரோலா விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | WFH செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி: Vi அதிரடி திட்டம் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR