Honda Car Financing scheme: வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக நீங்கள் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) தனது வாடிக்கையாளர்களின் ஆட்டோ நிதி தேவைகளுக்காக இண்டஸ் இண்ட் வங்கியுடன் (IndusInd Bank) இணைந்துள்ளது. இந்த டீலின் கீழ், வாடிக்கையாளர்கள் பல சிறந்த சலுகைகளைப் பெறுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Honda Amaze, Honda City-இல் சலுகைகள்


ஹோண்டா கார்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த டீலில், ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய வாகனங்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான கடன் சலுகைகளைப் பெறுவார்கள்.


இதில், குறைந்த இஎம்ஐ, வசதிக்கேற்ப கடன் காலம், 100% ஷோரூம் நிதி ஆகியவை கிடைக்கும். இது தவிர, தனிப்பயனாக்கப்பட்ட நிதி உதவி ஆகியவையும் கிடைக்கின்றன. இதைத் தவிர, விவசாயிகள் போன்ற குறிப்பிட்ட வாடிக்கையாளர் குழுக்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட நிதி உதவிகளும் கிடைக்கும்.


ALSO READ:மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது: எவ்வளவு? எப்போது? விவரம் உள்ளே


பண்டிகை காலத்திற்கு முன் சலுகைகள்


பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ஹோண்டா கார்ஸ் (Honda Cars) பல நிதியாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகள், சில்லறை நிதி வழங்குனர்கள் மற்றும் NBFC கள் ஆகியவை அடங்கும். நிறுவனத்தின் முக்கிய கவனம் செமி-நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகள் பக்கம் உள்ளது.


இந்த டீல்களின் கீழ், நிறுவனம் கார் வாங்குபவர்களுக்கு லாபகரமான வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான கட்டண விருப்பங்களை வழங்குகிறது. கோவிட் தொற்றுநோய் காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு எளிதாக நிதி உதவி கிடைத்தால், கார்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இண்டஸ்இண்ட் வங்கியுடனான கூட்டாண்மை காரணமாக, மாத சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் வாடிக்கையாளர்கள் என இரு பிரிவு வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள் என HCIL மூத்த துணைத் தலைவரும் இயக்குநருமான (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) ராஜேஷ் கோயல் கூறினார்.


பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறினார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், கார் (Cars) வாங்குவதை ஊக்குவிக்க எளிதான நிபந்தனைகளில் கடன் வசதியை தாங்கள் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.


ALSO READ: Honda Amaze 2021: அட்டகாசமாய் அறிமுகம் ஆகிறது, முன்பதிவு செய்யும் எளிய வழிகள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR