Honda Amaze 2021: அட்டகாசமாய் அறிமுகம் ஆகிறது, முன்பதிவு செய்யும் எளிய வழிகள் இதோ

இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), ராஜஸ்தான், தபுகாராவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து அதன் பிரபல பாமிலி செடான் நியூ ஹோண்டா அமேஸின் பெருமளவிலான உற்பத்தி பணியைத் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2021, 04:27 PM IST
Honda Amaze 2021: அட்டகாசமாய் அறிமுகம் ஆகிறது, முன்பதிவு செய்யும் எளிய வழிகள் இதோ title=

Honda Amaze 2021: ஹோண்டா கார்ஸ் இந்தியா, புதிய அமேஸ் 2021 தயாரிப்பைத் தொடங்கியதாக அறிவித்துள்ளது. செடான், ஆகஸ்ட் 18 அன்று அறிமுகம் ஆகும் என்றும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நிறுவனம் புதிய அமேஸின் (Amaze) முன்பதிவுகளையும் தொடங்கியுள்ளது. இதில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைனில், HCIL இணையதளத்தில் உள்ள 'Honda from Home’ தளத்தில் இருந்தும், அல்லது,  நாடு முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஷிப்கள் மூலமாகவும் காரை முன்பதிவு செய்யலாம்.

இதன் ஆன்லைன் முன்பதிவு தொகை ரூ. 5000 ஆகும். முன்பதிவு செய்துவிட்டு இந்த கார் வேண்டாம் என ஒருவர் முடிவு செய்தால், இந்த தொகை 100% திரும்ப அளிக்கப்படும். இந்த தளம் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு, நெட் பேங்கிங், பேடிஎம் வாலட், யுபிஐ (யுனிவர்சல் தனிப்பட்ட இடைமுகம்) போன்ற பல கட்டண வசதிகளையும் வழங்குகிறது .

ALSO READ:Honda பம்பர் சலுகை: 3 கார்களில் அதிரடி சலுகைகள், மிஸ் செஞ்சிடாதீங்க!!

வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் எளிய வழிகளில் அமேஸ் காரை முன்பதிவு செய்யலாம்.

- ஹோண்டாவின் (Honda) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். 

- உங்கள் பெயர், தொடர்பு விவரங்களை உள்ளிட்டு, உங்கள் மொபைலில் OTP ஐப் பெற்ற பின், Book Now என்பதை பிரெஸ் செய்யவும். 

- மாதிரி (Model), மாறுபாடு (Variant) மற்றும் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- நீங்கள் காரை வாங்க விரும்பும் நகரத்தையும் டீலரையும் தேர்வு செய்யவும்.

- முகவரி மற்றும் PAN விவரங்களைப் பகிரவும்.

- தேவையான பணத்தை செலுத்தவும்.

இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), ராஜஸ்தான், தபுகாராவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து அதன் பிரபல பாமிலி செடான் நியூ ஹோண்டா அமேஸின் பெருமளவிலான உற்பத்தி பணியைத் தொடங்கியுள்ளது.

ஹோண்டா அமேஸ், ஹோண்டாவின் மிகப்பெரிய விற்பனை மாடல் ஆகும். இது இந்தியாவில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதன் வித்தியாசமான, சிறந்த வடிவமைப்பு, அதிநவீன மற்றும் விசாலமான உட்புறங்கள், சிறந்த ஓட்டுநர் செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவை இதை ஒரு மிகச்சிறந்த காராக நிலைநாட்டுகின்றன. ஹோண்டா அமேஸ் 1.5L i-DTEC டீசல் எஞ்சின் மற்றும் 1.2L i-VTEC பெட்ரோல் எஞ்சின் ஆகிய இரண்டு எரிபொருள் வகைகளிலும் மேனுவல் மற்றும் CVT பதிப்புகளில் கிடைக்கிறது.

ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பு வரம்பில் ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ், ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும் ஹோண்டா சிட்டி (Honda-City) ஆகியவை உள்ளன.

ALSO READ: Tata Cheapest SUV: தீபாவளி ரிலீசாக மலிவு விலையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Tata HBX

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News