’குக்கரால் வந்த வினை’ ரூ.1 லட்சம் தண்டம் கட்டும் அமேசான்
தரமற்ற குக்கர்களை விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவின் ஆன்லைன் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில் அவற்றின் தரம் புகார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தன. இதுகுறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக களத்தில் இறங்கியது. தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனங்களை கண்காணித்து, தாமாகவே விசாரணையை தொடங்கியது. அதில் அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப் டீல் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனைகள் குறித்து கண்காணிக்கப்பட்டது.
இந்த விசாரணையில் உள்நாட்டில் தயாரித்த தரமற்ற குக்கர்களை அமேசான் மூலம் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டாய தரச் சோதனையின் அளவில் அந்த குக்கர் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்திடம், தரமற்ற குக்கர்களை விற்பனை செய்த 2, 265 குக்கர்களை உடனடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப்பெற்று, வாங்கிய தொகையை மீண்டும் திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும் படிக்க | ஆண்டு முழுவதும் ஹாட்ஸ்டார் Free! ஜியோவின் லேட்டஸ்ட் சூப்பர் பிளான்
அமேசான் நிறுவனமும் தரமற்ற குக்கர்களை விற்பனை செய்து கொடுத்தற்காக விற்பனை கமிஷன் பெற்றதையும் ஒப்புக் கொண்டது. இதுகுறித்து உரிய அறிக்கை சமர்பிக்க வேண்டும் என அமேசான் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் முதன்மை ஆணையர் நிதி கரே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேபோல் மற்ற நிறுவனங்களின் விற்பனை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக பேடிஎம் மாலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல், ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருந்துகளின் விற்பனை தொடர்பாகவும் அனைத்து இ-காமர்ஸ் தளங்களுக்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அணையம் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. தவறான வழிகாட்டுதல்கள், குழந்தைகளை இலக்காக கொண்ட விளம்பரங்கள் குறித்து நெறிமுறைகளை வழங்கியுள்ளது. குக்கர், ஹெல்மெட் மற்றும் காஸ்சிலிண்டர் பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு அறிவிப்புகளையும், வாட்டர் ஹீட்டர்கள், தையல் இயந்திரங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், எல்பிஜி கொண்ட வீட்டு எரிவாயு அடுப்புகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தொடர்பாக எச்சரிக்கையையும் சிசிபிஏ வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | விலையை சரியாக சொன்னால் OnePlus 5G ஸ்மார்ட்போன் இலவசம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ