சாம்சங் கேலக்ஸி எஸ்4 Samsung Galaxy S24 தொடர் சில காலத்திற்கு முன்பு இந்திய சந்தைக்கு வந்த தொலைபேசி,  பலரின் கனவு போனாக உள்ளது.  இன்றைய காலகட்டத்தில், கடன் வசதி இஎம் ஐ வசதி போன்றவை உள்ளதால்,  நடுத்தர மக்களாலும் விலை உயர்ந்த போன்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Samsung Galaxy S24 Ultra என்னும் அசத்தலான ஸ்மார்ட்போனை அமேசான் க்ரேட் ஃப்ரிடம் பெஸ்டிவல் சேல் என்னும் ( Amazon Great Freedom Festival) சலுகை விற்பனையின் போது குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் தள்ளுபடி


முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டபோது,  12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைக்கு ரூ 1,34,999  என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ 1,24,999 . கூடுதலாக, அமேசான், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5,250 வரை கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறது. 


எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் விபரம்


சாம்சங்கின் இந்த ஸ்மார்போனை வாங்க எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனை Samsung Galaxy S24 Ultraக்கு மாற்றும்போது அமேசான், உங்கள் போனின் மாடலுக்கு ஏற்ப ரூ.64,700 வரை தள்ளுபடி வழங்குகிறது. 


மேலும் படிக்க | மொபைல் எண்ணை BSNL க்கு போர்ட் செய்ய விருப்பமா? எளிமையான சுலப வழிமுறை!


Samsung Galaxy S24 அல்ட்ரா  சிறப்பும்சங்கள்


1. சாம்சங் கேலக்ஸி எஸ்4  புதிய Snapdragon 8 Gen 3 சிப் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், சாம்சங்கின் One UI 6.1 உடன் Android 14 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 


2. டிஸ்ப்ளே: ஃபோன் 6.8-இன்ச் எட்ஜ் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.


3. எல்லா நிலைகளிலும் கூர்மையான மற்றும் தெளிவான புகைப்படங்களை எடுப்பதற்கு கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் சக்திவாய்ந்த 200MP அகல கேமரா, ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ்,  5x ​​மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ், 12MP அல்ட்ரா-வைட் ஷூட்டர்  ஆகியவை அடங்கும். செல்ஃபி பிரியர்களுக்கு, 12எம்பி முன்பக்க கேமரா உள்ளது


4. பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன்: 45W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி மூலம் நீண்ட நேரத்திற்கு பேட்டரியை சார்ஜ் செய்ய  தேவைபப்டாது என்பதோடு, விரைவில் சார்ஜ் செய்ய இயலும்


5. கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் வாட்டர் ப்ரூப் அம்சம் கொண்டது. 


6. சாம்சங் கேலக்ஸி S24  போன்களில் பல பிரத்யேக AI அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன., இது கூட்டாக 'Galaxy AI' என அழைக்கப்படுகிறது. இதில், லைவ் டிரான்ஸ்லேட், நோட் அசிஸ்ட் மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் அடங்கும்.


மேலும் படிக்க | சுதந்திர தின சலுகை விற்பனை... Xiaomi ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கு 57% வரை தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ