ஹர்திக் பாண்டியா வைத்துள்ள சொகுசு கார்கள் - அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா வைத்துள்ள சொகுசு கார்களையும் அதன் மதிப்புகளையும் இதில் காணலாம். 

  • May 24, 2024, 21:20 PM IST

ஹர்திக் பாண்டியா மொத்தம் 8 சொகுசு கார்களை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 /8

Rolls Royce: ஹர்திக் பாண்டியாவிடம் இருப்பதில் விலை உயர்ந்த கார் என்றால் அது இதுதான். சில்வர் மற்றும் கருப்பு கலந்த நிறங்களில் அவரிடம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 6.22 கோடி ரூபாய் என கணக்கிடப்படுகிறது.   

2 /8

Lamborghini Huracan EVO: ஆரஞ்சு நிறத்தில் இந்த காரை பாண்டியா வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.3.22 கோடி முதல் ரூ.3.73 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.   

3 /8

Range Rover Vogue: வெள்ளை நிறத்தில் இந்த காரை ஹர்திக் பாண்டியா வாங்கியுள்ளார்.இதன் மதிப்பு  ரூ.2.39 கோடி முதல் ரூ.4.17 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. 

4 /8

Mercedes G-wagon: ஹர்திக் பாண்டியா வைத்துள்ள இந்த காரின் விலை ரூ.2.55 கோடி முதல் ரூ. 4 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.   

5 /8

Porsche Cayenne: ஹர்திக் பாண்டியா வைத்துள்ள இந்த கார் ரூ.1.36 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.   

6 /8

Audi A6: ஹர்திக் பாண்டியா இந்த காரை வெள்ளை நிறத்தில் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.64.07 லட்சம் முதல் ரூ.70.41 லட்சம் வரை இருக்கலாம்.   

7 /8

Jeep Compass: ஹர்திக் பாண்டியா இந்த காரை சிவப்பு நிறத்தில் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.20.69 லட்சம் முதல் ரூ.32.41 லட்சம் வரை இருக்கலாம்.   

8 /8

Toyota Etios: இந்த காரின் மதிப்பு ரூ.7.04 லட்சம் முதல் ரூ.9.24 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.