கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அமேசானில் நடந்து வருகிறது. இந்த பண்டிகை கால விற்பனையில் மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களை மிக பெரும் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளன. அதனை வாடிக்கையாளர்கள் மலிவாக வாங்கலாம். அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின்படி, மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் 80 சதவீத தள்ளுபடியுடன் விற்கப்படுகின்றன. இது தவிர, குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, TECNO போன்கள் பண்டிகை விற்பனையின் போது குறைந்த விலையில் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னணி இ-காமர்ஸ் தளமான அமேசானில் நடைபெற்று வரும் பண்டிகைகால விற்பனையின் போது (Amazon Great Indian Festival sale 2023), அனைத்து Tecno POVA 5 சீரிஸ்கள் மற்றும் Phantom V Fold ஃபோன்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் Phantom V Flip போனில் ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. நீங்கள் லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தாலும், அமேசானின் இந்த பண்டிகைகால விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | ஜியோ வாடிக்கையாளர்களே..! நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் இலவசம்


லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் ஆஃபர்


அமேசான் தனது மெகா விற்பனையில் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த சலுகைகளை வழங்குகிறது. நீங்கள் குறைந்த விலையில் மடிக்கணினி வாங்க விரும்பினால் இந்த விற்பனையின்போது வாங்கலாம். டெல் 14 லேப்டாப்பின் அசல் விலை ரூ.50837. பண்டிகை விற்பனையில், அமேசான் இந்த லேப்டாப்பை 43 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் Dell 14 லேப்டாப்பை ரூ.28990-க்கு வாங்கலாம். குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச்களைப் பற்றி பேசினால், Fire-Boltt Ninja Call Pro Plus ஸ்மார்ட்வாட்ச்சின் அசல் விலை ரூ. 19,999. ஆனால் ஆஃபரில் ​​Amazon அதை 95 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்வாட்சை ரூ.1,099க்கு வாங்கலாம்.


டெக்னோ பாண்டம் வி பிலிப் மொபைல்


TECNO Phantom V Fold போனின் ஸ்கிரீன் அளவு 7.8-இன்ச் ஆகும். இது 2K LTPO AMOLED முதன்மை திரையைக் கொண்டுள்ளது. சமீபத்திய டெக்னோ போனில் MediaTek Dimensity 9000+ சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட ஸ்மார்ட்போனைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மடிக்கக்கூடிய சாதனம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நல்லது. Phantom V Fold ஃபோன், HiOS 13 Fold UI உடன் Android 13 இயங்குதளத்தில் வேலை செய்கிறது. பெரிய அளவிலான டிஸ்ப்ளே கொண்ட இந்த ஃபோல்டிங் போன் மேட் இன் இந்தியா கீழ் தயாராகியுள்ளது.


TECNO Phantom V Fold போனின் அசல் விலை ரூ.78,499. விற்பனையின் போது, ​​இந்த பிலிப் ஸ்மார்ட்போன் எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.77,499க்கு வாங்கலாம். கூடுதலாக, 6 மாத கால EMI அம்சம், ரூ.1000 சிறப்பு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியைப் பெறலாம்.


டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் மொபைல்


லேட்டஸ்ட் பிலிப் மொபைல் TECNO Phantom V Flip-ன் ஸ்கிரீன் அளவு 1.32 அங்குலங்கள் உள்ளது. Phantom V Flip ஃபோன் டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64MP முதன்மை கேமரா மற்றும் 13MP சென்சார் உள்ளது. வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபிக்கு முன் ஃபிளாஷ் கொண்ட 32MP முன்பக்க கேமரா உள்ளது. இதில் Mediatek Dimensity 8050 சிப்செட் உள்ளது. டெக்னோவின் இந்த மடிக்கக்கூடிய போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பக வேரியண்டில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.54,999. பண்டிகை விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி அமேசானில் இருந்து இந்த போனை வாங்குவதன் மூலம் ரூ.1500 தள்ளுபடியைப் பெறலாம். 12 மாத கால அவகாசம் கொண்ட நோ-காஸ்ட் EMI விருப்பத்துடன் வாங்குவதன் மூலம் ரூ.4500 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும் பெறலாம்.


TECNO Pova 5 சீரிஸ்


பிரீமியம் வடிவமைப்பு மற்றும் பட்ஜெட் நட்பு ஸ்மார்ட்போன் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் TECNO Pova 5 தொடரை முயற்சி செய்யலாம். 6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட அதன் செக்மென்ட்டில் இதுவே முதல் போன். பேட்டரியை சார்ஜ் செய்ய, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கப்படுகிறது. நாள் முழுவதும் ஃபோனைப் பயன்படுத்துவதற்கும் கேமிங்கிற்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும். TECNO Pova 5-ன் அசல் விலை ரூ.11,999. விற்பனையின் போது, ​​அமேசானில் இருந்து ரூ.10,399க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி கூடுதலாக ரூ.1000 தள்ளுபடியைப் பெறலாம். மேலும் 3 மாத கால அவகாசத்துடன் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தையும் பெறலாம்.


Pova 5 Pro-ன் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB வகைகளை முறையே ரூ.12,899 மற்றும் ரூ.14,399க்கு வாங்கலாம். எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக, இது 3 மாத கால அவகாசத்துடன் கட்டணமில்லா EMI விருப்பத்திலும் கிடைக்கிறது. இதில் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. 


மேலும் படிக்க | GoPro கேமரா 50% தள்ளுபடி..! யூடியூபர்களுக்கு ஜாக்பாட் - அமேசானில் அதிரடி ஆஃபர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ