சர்வதேச அளவில் மிகபெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ப்ளிப்கார்ட்டை வாங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய நிறுவனமான ஃபிளிப்கார்ட் முன்னாள் அமேசான் ஊழியர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சாலா ஆகியோரால் 2007-ம் ஆண்டு துவக்கப்பட்டது. பெரும்பாலும் இந்தியாவின் சுமார் 40% இணையதள வணிக வியாபாரம் ஃபிளிப்கார்ட் மூலமாகவே நடப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வுகலும் தெரிவித்தனர். 


இந்தியாவை பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசான், பெரிய அளவில் இந்திய மார்க்கெட்டை பிடிக்கும் நோக்கில், பலசரக்கு பொருட்களை கூட ஆன்லைன் மூலம் ஆடர் செய்து வீட்டில் டெலிவரி செய்யும் திட்டங்களையும் துவக்கியது.


ஃபிளிப்கார்ட்-யுடன் போட்டியை சமாளிக்க, சுமார் 5 பில்லியன் டாலர்களை இந்திய அமேசானில் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் திட்டமிட்டுள்ளாராம். இந்நிலையில் வேகமாக வளரும் அமேசானை சமாளிக்க, ஃபிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் என்னும் பிரபல அமெரிக்க சூப்பர்மார்கெட் நிறுவனத்துடன் கூட்டணி வைக்க ஆலோசித்து வருகிறது எனவும் தகவல்கள் வெளியானது. இந்த கூட்டணியில், ஃபிளிப்கார்ட்-ன் 40% பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


ஃபிளிப்கார்ட் வாங்க, தற்போது அமேசான் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வால்மார்ட்-ம், அமேசானும் ஃபிளிப்கார்ட்-ன் 40% பங்குகளை வாங்க தற்போது கடும் போட்டியில் உள்ளார்களாம்.


இந்த போட்டியால, பொருட்களோட விலை குறைஞ்சா நமக்கு சந்தோஷம் தானே...!