பேடிஎம் மற்றும் கூகுள் பே போன்ற பேமெண்ட் செயலிகளுக்கு இணையாக பயன்படுத்தும் செயலி அமேசான் பே. இந்த பேமெண்ட் செயலியில் பலருக்கும் தெரியாத சூப்பரான ஆப்சன் ஒன்று இருக்கிறது. இந்த ஆப்சனை நீங்கள் சரியாக பயன்படுத்தும்பட்சத்தில் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இ-வாலட் சேவை 


அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமானது அமேசான் பே ஆப் (Amazon Pay App). கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற மற்ற நிறுவனங்களின் பேமெண்ட் செயலிகளை போன்றது இந்த ஆப். அமேசான் பே செயலியில் இ-வாலட் சேவை (e-wallet service) உள்ளது. இதில் பொதுவாக வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அமேசான் இ வாலட்டிற்கு மாற்றுவது எப்படி? என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், இ வாலட்டில் இருந்து வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றுவது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.


பண பரிமாற்றம் 


நீங்கள் அமேசான் பேமெண்ட் செயலியில் முழுமையாக கே.ஒய்.சி முடித்திருந்தால், அமேசான் பே பேலன்ஸை பேங்க் அக்கவுண்டிற்கு மாற்ற முடியும். அதற்கு முதலில் உங்கள் மொபைலில் அமேசான் (Amazon) ஆப்பை திறக்கவும். பின்னர் அமேசான் பே செக்ஷனுக்கு செல்லவும். அதனை தொடர்ந்து சென்ட் மணி (Send money) என்பதை கிளிக் செய்க. இப்போது டூ பேங்க் (To Bank) ஐகானை கிளிக் செய்யவும்


அங்கு உங்களுடைய அமேசான் பே பேலன்ஸை டிரான்ஸ்பர் செய்ய விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டின் விவரங்களை  பதிவிடவும். விவரங்களை சரியாக கொடுத்த பின்னர் பே நவ் (Pay Now) பட்டனை கிளிக் செய்யவும். அமேசான் பே பேலன்ஸில் இருந்து எவ்வளவு தொகையை டிரான்ஸ்பர் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உள்ளிட்டு கன்ட்டிநியூ (Continue) பட்டனை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் கீழ் பகுதியில் ஒரு பாப்-மெனு தோன்றும். அதில் அமேசான் பே பேலன்ஸ் மூலம் பணம் செலுத்துவதற்கான ஆப்சனை கண்டால், அதை கிளிக் செய்யவும். 


உங்கள் வங்கிக் கணக்கில் பணம்


ஒருவேளை மேற்குறிப்பிட்ட ஆப்சன் காணப்படவில்லை என்றால், ஷோ மோர் (Show more) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து, அதனுள் அமேசான் பே பேலன்ஸ் மூலம் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். - பிறகு கன்ட்டிநியூ (Continue) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான் உங்கள் அமேசான் பே பேலன்ஸில் இருக்கும் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்.


மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் - கட்டண விவரம் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ