பண்டிகை காலம் என்றாலே ஆஃபர் தான். அதுவும் தற்போதைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் ஷாப்பிங்கில் நாம் அதிகம் எதிர்பார்ப்பது ஆஃபர் தான். இந்த பொங்கல் திருநாளுக்கு அமேஷான் நிறுவனம் கொடுத்துள்ள ஆஃபரில் காஸ்டிலியான பல பொருட்கள் எக்கச்சக்க ஆஃபரில் கிடைக்கிறது. இந்த பதிவில் அமேஷான் 2023 பொங்கல் ஆஃப்பரில் கிடைக்கும் போன்கள் பற்றி காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 40% வரை ஆஃப்பரில் கிடைக்கும் பல போன்கள் வாடிக்கையாளருக்கு கொண்டாட்ட தான். பழைய மொபைலை மாற்றி புதிய மாடலில்  வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 2023 அமேஷான் ஆஃபர் ஜாக்பாட் தான்.


Redmi 11 Prime 5G


4 GB RAM 64 GB ROM கொண்ட Redmi 11 Prime 5G போன் 19% ஆஃபரில் கிடைக்கிறது. 5G சேவையில் செயல்படும் இந்த Redmi 11 Prime 5G 15999 ரூபாய் இருந்து 12999 ரூபாய்க்கே கிடைக்கிறது. EMI ஆப்சன் கொண்ட இந்த போனை HDFC card மூல வாங்கினால் 1000 ரூபாய் மேலும் குறையும். 


மேலும் படிக்க | ரூ 699 ரீசார்ஜ் பிளான்..130 நாட்கள் வேலிடிட்டி..பிஎஸ்என்எல் அசத்தல்


Samsung M33 5G


Samsung பிராண்டில் பிரபலமான M series போன்கள் அதிகமான வாடிக்கையாளரை கவர்ந்த போன் ஆகும். இந்த M series இல் 5G சேவை அளிக்கும் Samsung M33 5G 32% ஆஃபரில் கிடைக்கிறது.  24,999 ரூபாய்க்கு விற்பனை செய்யும்  Samsung M33 5G 16,999 ரூபாய்க்கு வாங்க முடியும். 


அதே M series இல் 12 GB RAM கொண்ட Samsung M13 மொபைல் 28% ஆஃப்பரில் கிடைக்கிறது. ஏறக்குறைய 18,000 ரூபாய் மதிப்புள்ள Samsung M13 28% ஆஃபரில் 12,999 கிடைக்கிறது. அதுவும் HDFC பேங் கார்டு மூலம் இணையத்தில் வாங்கினால் 10% ஆஃபர் மேலும் கிடைக்கும்.


OPPO A74 5G


5g சேவையில் செயல்படக்கூடிய FHD டிஸ்பிளே Qualcomm Snapdragon பராஸ்ஸர் கொண்ட Oppo A74 போன் அசல் விலை 20990 ரூபாய் ஆகும். சிறப்பு தள்ளுபடியாக 26% ஆஃப்பரில் 15490 ரூபாய்க்கு கிடைக்கும். இரண்டு அசத்தலான கலர் வேரியண்டில் கிடைக்கும் Oppo A74 6GB RAM 128GB ஸ்டோரேஜ் கொண்டது ஆகும். 90.5% side fingerprint sensor மற்றும் 5000 mAh பேட்டரி போன்ற ஆஃபன்கள் இந்த போனை வாங்கலாம் என சிந்திக்க வைக்கும். 740 ரூபாய் முதல் அமேஷானில் No Cost EMI ஆப்சனில் விற்பனை ஆகிறது.


iQOO Z6 


தற்போது டிரெண்டிங்கில் அதிகம் வாடிக்கையாளர் தேடலில் இருக்கும் IQOO Z6 போன் 28% அஃப்பரில் கிடைக்கிறது. 50% சார்ஜ் 27 நிமிடங்களிலே ஏறிவிடும், டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற ஆப்சன்கள் தான் IQOO பிராண்டை அதிக வாடிக்கையாளரை ஈர்த்துள்ளது. 19,999 ரூபாய்க்கு கிடைக்கும்  iQOO Z6 போன் 14,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 693 ரூபாய்க்கு கிடைக்கும் NO Cost EMI ஆப்சன் போனை வாங்க உதவிக்கரமாக இருக்கும். 


மேலும் படிக்க | 2023இல் இந்தியாவை மிரட்ட இருக்கும் மின்சார கார்கள்... இனி இதுக்குதான் மவுஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ