கொளுத்தும் கோடையில், உங்கள் வீட்டிற்கு நல்ல ஸ்பிலிட் ஏசி வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒரு குட் நியூஸ் அமேசான் சம்மர் சேல் மூலம் மிகக் குறைந்த விலையில் சிறந்த ஏசியை வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடையில், வெளியில் இருந்து வீடு திரும்பும் போது, ​​உங்கள் அறையை சில நிமிடங்களில் உடனே குளிர்ச்சியடைய செய்யும் ஏசி ஒன்றை வாங்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கும். அமேசான் சம்மர் சேலில் கிடைக்கும் சிறந்த ஸ்பிளிட் ஏசியை வாங்குவதன் மூலம் உங்களின் இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த சலௌகை விற்பனையில் ல், 53,000 ரூபாய் மதிப்பிலான 1.5 டன் ஏசியை 31,000 ரூபாய்க்கு வாங்கிப் பயனடையலாம்.


1.5 டன் ஏசியில் கிடைக்கும் அசத்தல் தள்ளுபடி


புளூ ஸ்டார் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி சந்தையில் 53,000 ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், அமேசான் சலுகை விற்பனையில், 31% தள்ளுபடிக்குப் பிறகு 36,490 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த சலுகையில் வழங்கப்படும் கூப்பன் தள்ளுபடியின் கீழ், நீங்கள் மேலும் ரூ.1,500 தள்ளுபடி பெறுவீர்கள். இதன் மூலம் இந்த ஏசியின் விலை ரூ.36,490ல் இருந்து ரூ.34,990 ஆக குறையும்.


மேலும் படிக்க | கார் வாங்கணுமா? மே மாதத்தில் மாருதி கார்களில் கிடைக்கும் பம்பர் தள்ளுபடிகள்


கூடுதல் சலுகை


இந்த புளூ ஸ்டார் ஏசி வாங்குவதில் வங்கிச் சலுகையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால், உங்களுக்கு மேலும் ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். மேலும், உங்கள் பழைய ஏசிக்கு பதிலாக ப்ளூ ஸ்டார் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசியை வாங்கினால், நீங்கள் ரூ.2,480 வரை சேமிக்க முடியும். இதன் மூலம், ஒட்டுமொத்தமாக இந்த ஏசியை ரூ.53 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.31,260க்கு எடுத்துச் செல்லலாம்.


ப்ளூ ஸ்டார் ஏசியின் சிறப்பு அம்சங்கள்


ப்ளூ ஸ்டார் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி, ஏசியின் சுருள்களைப் பாதுகாக்கும் அரிப்பைத் தடுக்கும் ப்ளூ பின்ஸ் உள்ளது. டர்போ கூலிங் மோட் உடன் வரும் இந்த ஏசியில், சிறப்பு செல்ப்-டயக்னோசிஸ் அம்சங்கள் உள்ளது. இதனால் AC தானாகவே எந்த பிரச்சனையையும் கண்டறியும். 100% தாமிரத்தால் செய்யப்பட்ட இந்த ஏசி 52 டிகிரி வெப்பநிலையிலும் அறையை சில நிமிடங்களில் குளிர்விக்கும். ப்ளூ ஸ்டார் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி 3 நட்சத்திர மதிப்பீட்டில் வருகிறது. மின்சாரத்தை மிச்சப்படுத்துவதினால், மின் கட்டணம் அதிகமாக இருக்காது.


மேலும் படிக்க | Mahindra Atom: நாட்டின் மிக மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR