அமித் ஷாவின் புகைப்படத்தை நீக்கிய Twitter மீண்டும் அதை சரிசெய்ததன் பின்னணி தெரியுமா?
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்தை அவரது டிவிட்டர் கணக்கில் இருந்து திடீரென்று நீக்கியது டிவிட்டர் நிர்வாகம். காரணம் தெரியாமல் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி: நவம்பர் 13ஆம் தேதியன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டிவிட்டர் கணக்கில் இருந்து அவரது புகைப்படம் திடீரென்று நீக்கியது டிவிட்டர் நிர்வாகம். இதற்கான காரணம் தெரியாமல் பரபரப்பு ஏற்பட்டது.
பதிப்புரிமை சிக்கல்கள் காரணமாக அமித் ஷாவின் ட்விட்டர் புகைப்படம் அகற்றப்பட்டது என கூறிய டிவிட்டர் மீண்டும் அதை சரி செய்து மீட்டமைத்தது. இது "கவனக்குறைவான பிழை" என்று ஒப்புக்கொண்ட டிவிட்டர், பிறகு உள்துறை அமைச்சரின் கணக்கை மீட்டமைத்தது.
"பதிப்புரிமை வைத்திருப்பவரின் நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த புகைப்படம் அகற்றப்பட்டது" என முதலில் கூறப்பட்டது.
இப்போது அமித் ஷாவின் கணக்கு இப்போது முழுமையாக செயல்படுகிறது, ஆனால் அவரது புகைப்படம் நீக்கப்பட்டு, மீண்டும் மீட்டமைக்கப்பட்ட விவகாரம் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்விட்டர் படத்திற்கான உரிமைகள் புகைப்படக்காரரிடம் இருப்பதால், அவரது புகைப்படம் அகற்றப்பட்டதா என்பதை டிவிட்டர் தெளிவாக விளக்கியிருக்கிறது.
"பொதுவாக, ஒரு புகைப்படத்தின் உரிமை புகைப்படக்காரருக்கு இருக்கும். ஆனால் புகைப்படத்தில் இருப்பவர் மீதான உரிமை அல்ல, இது இயல்பான ஒன்று என்றாலும், புகைப்படத்தின் உண்மையான உரிமைதாரர் தொடர்பான ட்விட்டரின் கொள்கைகளின் படி அமித் ஷாவின் புகைபப்டம் நீக்கப்பட்டது" என்பதே டிவிட்டரின் விளக்கம்.
முன்னதாக, பி.சி.சி.ஐ.யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் முகப்பு புகைப்படமும் இதே போன்ற காரணங்களால் அகற்றப்பட்டது. லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த லே பகுதியை ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாகக் காட்டியதற்காக ட்விட்டருக்கு மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிவிட்டரின் இந்த செயல் இந்திய அரசின் இறையாண்மையை மீறுவதாக கூறிய மத்திய அரசு, இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசுடன் முரண் கொள்கிறதா டிவிட்டர் என்ற கேள்வியும் எழுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR