ஆண்ட்ராய்டு சாதன உரிமையாளர்கள் கவனிக்க வேண்டிய தீவிர எச்சரிக்கையை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். கூகிள் பிளே ஸ்டோரில் எட்டு 'ஆபத்தான' பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை உங்கள் வங்கிக் கணக்கை திருடக்கூடும். உங்கள் தொலைபேசியில் இந்த பயன்பாடுகள் ஏதேனும் நிறுவப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக நீக்கி விடவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செக் பாயிண்ட் ரிசர்ச் படி, எட்டு பயன்பாடுகள் (Google Playstore) வழியாக பரவி வரும் 'Clast82' என அழைக்கப்படும் தீம்பொருள் தான் அவர்கள் கண்டுபிடித்தது என்று விளக்கினார். இது உங்கள் ஸ்மார்ட்போன்களை நிதி சார்ந்த ட்ரோஜன்களுடன் செலுத்தக்கூடிய புதிய டிராப்பரைக் கொண்ட 10 மால்வேர் (malwareஆப்கள் கண்டறியப்பட்டுள்ளன.


ALSO READ: Tech Guide: உங்கள் பழைய mobile-ஐ விற்க வேண்டுமா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ!!


இது உங்களுக்கு எம்மாதிரியான தீங்குகளை கொடுக்கும் என்று யோசிக்கிறீர்கள் என்றால், இந்த ஆப்கள் உங்கள் வங்கி (Bank Details) விவரங்களை திருட ஹேக்கர்களை எளிதில் அனுமதிக்கலாம், இது உங்கள் பணத்தை திருடுவதில் சென்று முடியலாம்.


செக் பாயிண்ட் ரிசர்ச், ஒரு பிளாக் போஸ்ட் வழியாக 10 ஆண்ட்ராய்டு ஆப்கள் கிளாஸ்ட் 82 எனப்படும் டிராப்பரால் பாதிக்கப்பட்டுள்ளன, இது ஒரு நபரின் ஸ்மார்ட்போனுக்கு ஏலியன்போட் பேங்கர் மற்றும் எம்ஆர்ஏடி-ஐ (MRAT) நிறுவுகிறது.


இது தொடர்பாக Check Point Research கூகுளைத் தொடர்பு கொண்டு, இதுபோன்ற மால்வேர் ஆப்ஸ் இனிமேல் ப்ளே ஸ்டோரில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே இங்கே நாம் பேசும் 10 மால்வேர் ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால் அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். 


அந்த 10 ஆப்களின் லிஸ்ட்:
1. Cake VPN (com.lazycoder.cakevpns)
2. Pacific VPN (com.protectvpn.freeapp)
3. eVPN (com.abcd.evpnfree)
4. BeatPlayer (com.crrl.beatplayers)
5. QR/Barcode Scanner MAX (com.bezrukd.qrcodebarcode)
6. Music Player (com.revosleap.samplemusicplayers)
7. tooltipnatorlibrary (com.mistergrizzlys.docscanpro)
8. QRecorder (com.record.callvoicerecorder)


ALSO READ: iPhone 12 Mini, iPhone 12 Max: எத்தனை inch? எப்போது launch? விவரம் உள்ளே......


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR