புதுடெல்லி: இந்த நவீன பாலத்தின் சில படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளது ரயில்வே அமைச்சகம். இதுவொரு பொறியியல் அதிசயம் என்று டிவிட்டரில் அடிக்கோடிட்டிருக்கிறது இந்தியன் ரயில்வே…


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வேயின் முதல் கேபிள் பாணியிலான பாலம், Anji Khad Bridge வடக்கு ரயில்வேயின் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (Udhampur-Srinagar-Baramulla Rail Link (USBRL) பிரிவில் வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் (Jammu & Kashmir). ‘பொறியியல் அற்புதத்தின்’ முக்கிய அம்சங்கள் என்ன? இதோ இங்கே…  


அஞ்சி காட் பாலம் (Anji Khad Bridge) இந்திய ரயில்வேயின் பொறியியல் அற்புதங்களில் ஒன்றாகும், இது இந்திய ரயில்வேயின் முதல் கேபிள் பாணியிலான பாலமாகும். இந்த பாலம், ஜம்மு-காஷ்மீரில் கத்ரா (Katra) நகரை ரியாசி (Reasi) உடன் இணைக்கும் என்று ரயில்வே அமைச்சகம் கூறுகிறது.



செனாப் (Chenab) ஆற்றுப் படுகைக்கு மேலே 331 மீட்டர் உயரத்தில் உருவாகிறது Anji Khad Bridge. பாலத்தின் மொத்த நீளம் 473.25 மீட்டர் ஆகும். இப்பகுதியின் சிக்கலான புவியியல் அமைப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு வளைவு பாலம் கட்டப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றே கூறப்பட்டது. ஆனால், இது அசாத்தியத்தையும் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறது இந்தியன் ரயில்வே. ஒற்றை pylon இல் அமைக்கப்படும் இந்த பாலம், 96 கேபிள்களின் ஆதரவில் நிற்கும்.  



ரயில்வே அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆஞ்சி காட் பாலம் (Anji Khad Bridge) உலகின் ஏழாவது பெரிய வளைவு வடிவ பாலமாகும், ஆற்றின் இரு கரைகளைத் தவிர வேறு எந்த ஆதரவும் இந்த பாலத்திற்கு கிடையாது.  இந்த பாலத்திற்காக அமைக்கப்படும் தூண்கள் அதிர்வுகளையும் தாங்கும் திறன் கொண்டவை.


Also Read | வியாழன், சனி கோள்களின் ‘Great Conjunction’-ஐ தன் பாணியில் கொண்டாடும் Google Doodle


அஞ்சி காட் பாலத்தின் கான்கிரீட் தூண்கள் வெடிப்பைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதில் 1.2 மீட்டர் அகலமுள்ள மத்திய விளிம்பும் (central verge), 14 மீட்டர் அகலமுள்ள இரட்டை தண்டவாளங்களும் உண்டு.   .


மிக உயர்ந்த ரயில்வே பாலம்


கட்ரா (Katra) -காசிகுண்ட் (Qazigund) பகுதி தான் அஞ்சி காட் பாலம் (Anji Khad Bridge) அமைக்கப்படும் இடத்தில் மிகவும் சிக்கலான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. இது வடக்கு ரயில்வேயின் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (Udhampur-Srinagar-Baramulla Rail Link (USBRL) இன் ஒரு பகுதியாகும், இது இமயமலை வழியாக செல்கிறது. யூ.எஸ்.பி.ஆர்.எல் திட்டத்தில் செனாப் (Chenab) நதியில் கட்டப்படும் பாலமும் அடங்கும். செனாப் பாலம் உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமையும் ரயில் பாலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  


Also Read | அடுத்த 60 வருடங்களுக்கு பீட்சா இலவசம்.. தம்பதியினருக்கு அடித்த ஜாக்பாட்!


உயர்ந்த தொழில்நுட்பம்


ஜூலை மாதம், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், USBRL திட்டம், லட்சிய ரயில்வே உள்கட்டமைப்பு திட்டம் என்றும், அது சிறந்த தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அற்புதங்களுடன் கட்டப்பட்டு வருகிறது என்று கூறியிருந்தார். "இந்தியாவை இணைக்கிறது: இந்தியாவின் முதல் கேபிள் தங்கிய ரயில் பாலமான மகத்தான அஞ்சி காட் பாலம், ஜம்மு-காஷ்மீரில் கத்ரா மற்றும் ரியாசியை இணைக்கும்" என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR