ஆஸ்திரேலிய தம்பதியினர் 60 வருடங்களுக்கு இலவச டோமினோஸ் பீட்சாவை வென்றுள்ளனர்..!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு குடும்பம், டோமினோஸ்-யின் போட்டிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் 60 ஆண்டுகள் மதிப்புள்ள பீட்சாவை வென்ற முதல் நபராக காணப்படுகின்றனர். டோமினோஸ் ஆஸ்திரேலியா அவர்களின் 60 ஆவது பிறந்தநாளை டிசம்பர் 9 அன்று கொண்டாட ஒரு போட்டியை நடத்த முடிவு செய்தது.
அதில், பிரபல பன்னாட்டு பீட்சா விற்பனை நிறுவனமான டோமினோஸ் பீட்சா (Domino's Pizza) தங்களது 60-வது ஆண்டு விழாவைக் கொண்டாட டிசம்பர் 9 ஆம் தேதி பிறக்கும் குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தால் டொமினிக், பெண் குழந்தையாக இருந்தால் டொமினிக்யூ எனப் பெயரிட்டால் அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா கிடைக்கும் அளவிற்கான பணத்தைப் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதிகளான சிலிமென்டைன் ஓல்டு பீல்டு – ஆண்டனி லாட் ஆகிய இருவரும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சிலிமென்டைன் கர்ப்பமாக இருந்தார். சில நாட்களில் இருவருக்குக் குழந்தை (Child) பிறக்கும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி அன்று அதிகாலை 1.47 மணிக்கு தேதி அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
ALSO READ | நிர்வாணமாக வீட்டு வேலை செய்யும் பெண்கள்: 1 மணி நேரத்திற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆஸ்திரேலியாவில் ஒரு மாத பீட்சாவின் விலை 14 டாலர் ஆக 60 ஆண்டுகளுக்கு 10,080 ஆஸ்திரேலியா டாலர் என்பது தான் இதன் பரிசுத் தொகை. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 5.60 லட்சம் ஆகும். மேலும் இந்த தொகை ஒரு நபருக்கே வழங்கப்படும் என்பதால் முதலில் இதற்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலிமென்டைன் சுமார் 72 மணி நேரம் பிரசவ வலியிலிருந்தார். அவருக்குக் குழந்தை பிறப்பதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு தான் டோமினோஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் அந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதன் பின் இந்த பரிசுத் தொகை குறித்து அந்த தம்பதிக்குத் தெரிவிக்கப்பட்ட போது சிலிமென்டைனும், ஆண்டனியும் சேர்ந்து தங்கள் குழந்தைக்கு டோமினிக் எனப் பெயரிட முடிவு செய்தனர். அதன் பேரில் இருவரும் தங்கள் குழந்தைக்கு டோமினிக் எனப் பெயரிட்டு அதற்கான பிறப்பு சான்றிதழையும் வாங்கினர்.பின்னர் அந்த சான்றிதழை வைத்து டோமினோஸ் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்தனர். தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பம் செய்தவர்கள் இவர்கள் தான் என்பதால் இவர்களுக்கு அந்த பரிசுத் தொகையை அந்நிறுவனம் வழங்கியது.
மேலும் இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் வளர்ச்சிக்குக் காரணம் வாடிக்கையாளர்கள் தான். அதனால் எங்கள் கொண்டாட்டங்களையும் வாடிக்கையாளர்களுடனேயே கொண்டாடவேண்டும் என நினைத்தோம். அதனால் தான் இப்படி ஒரு வித்தியாசமான போட்டியை அறிவித்தோம். போட்டி அறிவித்த 2 மணி நேரத்தில் டொமினிக் பிறந்துவிட்டான் என்ற செய்தி எங்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. என அறிவித்தனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR