புதுடெல்லி:  Apple Iphone ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் புதிய பொருட்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் காரணமாக உலகில்  Apple Iphone-க்கு ரசிகர்களும் அதிகமாக உள்ளனர். இப்போது ஆப்பிள் நிறுவனம் 2023 ஆம் ஆண்டுக்குள் ஒரு ஃபோள்டபிள் ஐ-ஃபோனை அறிமுகம் செய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 இஞ்ச் ஃப்ளெக்சிபிள் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபோள்டபிள் ஐ-ஃபோனில் 16:9 ஆஸ்பெக்ட் வீதம் (Aspect Ratio) இருக்கும் என்றும் சில காலத்திற்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் கொடுக்கவில்லை. சாம்சங், ஹவாய், மோட்டோரோலா மற்றும் எல்ஜி போன்று, மடிக்கக்கூடிய அதாவது ஃபோள்டபிள் ஐ-ஃபோன் மாடலை ஆப்பிள் (Apple) கொண்டு வரப்போகிறதா என்பதும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெளிவாகவில்லை.


ஃபோள்டபிள் ஆப்பிள் ஐ-ஃபோன் அம்சங்கள் 


ஃபோள்டபிள் ஐ-ஃபோனில் 8 அங்குல கியூஎச்டி + டிஸ்ப்ளே கொடுகப்படும் என்றும் இதன் ரெசல்யூஷன் 1800x3200 பிக்சல்கள் இருக்கும் என்றும் ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இது சாம்சங் கேலக்ஸி Z Fold 2 இல் கிடைக்கும் QXGA + திரையை விட அதிக பிக்சல்கள் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். 


ALSO READ: Micromax மற்றும் Redmi ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு, புதிய விலை என்ன?


இந்த 8 அங்குல ஃபோள்டபிள் ஆப்பிள் ஐ-ஃபோனில் (Apple iPhone) 16: 9 ஆஸ்பெக்ட் விகிதம் இருக்கும். இது ஐ-ஃபோன் 12 மற்றும் ஐ-ஃபோன் 12 ப்ரோவில் வரும் 19.5: 9 விகிதத்திலிருந்து வித்தியாசமாக இருக்கும். 


2023 ஆம் ஆண்டில் ஆப்பிள் இந்த ஃபோள்டபிள் ஐ-ஃபோனின் 15-20 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சாம்சங், எல்ஜி உடன் கூட்டு சேர்ந்தது


ஃபோள்டபிள் ஆப்பிள் ஐ-ஃபோனின் டிஸ்பிளேவை உருவாக்க சாம்சங் (Samsung) நிறுவனத்துடன் கூட்டு ஏற்படலாம் என தகவல் வெளிப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எல்ஜி டிஸ்ப்ளே, ஆப்பிள் ஃபோள்டபிள் ஆப்பிள் ஐ-ஃபோனுக்கான ஃப்ளெக்சிபிள் டிஸ்பிளேவை உருவாக்கும் என்றும் முந்தைய சில அறிக்கைகள் கூறியுள்ளன. ஆப்பிளுடன் கூட்டி வைத்து டிஸ்பிளேவை தயார் செய்யப்போவது யார் என்பது கூடிய விரைவில் தெரியும்.


ALSO READ: Oppo A53 5G பம்பர் செய்தி: 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்தது விலை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR