அமேசான், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி வரலாற்று சாதனை படைத்த ஆப்பிள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபோன், மேக், ஐபாட் போன்ற பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை அறிமுகப்படுத்தி, உலகின் மிகவும் லாபகரமான நிறுவனங்களுள் ஒன்றாக வலம் வரும் ஆப்பிளின் மதிப்பு, தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று மதியம் திடீரென அந்நிறுவன பங்குகளின் மதிப்பு 207.05 டாலராக உயர்ந்துள்ளது. சமீபத்திய கணக்கின் படி, ஆப்பிள் நிறுவனத்துக்கு மொத்தம் 483 கோடி பங்குகள் உள்ளன. இதனால், அந்நிறுவன மதிப்பு 1 ட்ரில்லியன்  டாலர்களை தொட்டது. 


சிறிது நேரம் மட்டுமே இந்த நிலையில் ஆப்பிள் பங்குகள் நீடித்தன. நேற்றைய சந்தை மூடும் போது, ஆப்பிள் பங்குகளின் மதிப்பு 207 டாலருக்கு கீழ் சென்றது. வரும் நாட்களில், மேலும் சில முறை 1 ட்ரில்லியன் சாதனையை ஆப்பிள் தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மேல் இந்த நிலை நீடிக்காது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். ட்ரில்லியன் டாலர் மதிப்பை தொடும் முதல் அமெரிக்க நிறுவனம் ஆப்பிளாகும். 


இதற்கு முன், கடந்த ஆண்டு, சீன எண்ணெய் நிறுவனமான பெட்ரோசீனா கோ-வின் பங்குகள் 1 ட்ரில்லியனை தொட்டது. பின்னர் அது வரலாறு காணாத சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.