சான் பிரான்சிஸ்கோ: பழுதான AirPods Proவை இலவசமாக பழுதுபார்ப்பதாக அல்லது மாற்றுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone தயாரிப்பாளரான Apple தனது புதிய பழுதுபார்க்கும் திட்டத்தில், சத்தம் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளும் AirPods Proகளை பழுது நீக்கி கொடுப்பதாகவும், இல்லை என்றால் புதிதாக மாற்றிக் கொடுப்பதாகவும்  அறிவித்துள்ளது.


"பழுதான ஏர்போட்ஸ் புரோவினால் சில சிக்கல்கள் உண்டாகலாம். பேசும்போது கரகரவென்ற ஒலி ஏற்படுதுவது. சத்தம் ஏற்படுவதை ரத்து செய்யும் கருவிகள் சரியாக வேலை செய்யாதது, சுற்றுச்சூழலில் ஏற்படும் சப்தங்கள் அதிகரிப்பது, தெரு அல்லது விமான சத்தம் போன்ற பின்னணி ஒலிகளின் அதிகரிப்பு ஆகியவை Active Noise Cancellation சரியாக வேலை செய்யாததால் ஏற்படும் பாதிப்பு"என்று ஆப்பிள் வெள்ளிக்கிழமை  தெரிவித்துள்ளது.


ஆப்பிளின் கூற்றுப்படி, அக்டோபர் 2020 க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட ஏர்போட்ஸ் புரோவின் குறிப்பிட்ட உபகரணங்கள் ஒலி சிக்கல்கள் ஏற்படும் தன்மையை கொண்டிருக்கலாம்.


சந்தைப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்பிள் நிறுவனம் இந்த பழுதுநீக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட AirPods Proக்கள் பழுது நீக்கித் தரப்படும் அல்லது மாற்றித் தரப்படும். ஆனால் earbudsகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் நீட்டிக்கப்படவில்லை.


ஆப்பிள் அல்லது ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர் பாதிக்கப்பட்ட AirPods Pro வை (இடது, வலது அல்லது இரண்டும்) இலவசமாக பழுது பார்த்துக் கொடுப்பார். இருப்பினும், பழுதுபார்ப்பு திட்டத்திற்கு தகுதியுடையதாகக் கண்டறியப்படும் AirPods Pro சாதனங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பரிசீலிக்கப்படும்.


இந்த திட்டத்திற்கு குறிப்பிட்ட AirPods Pro தகுதியுள்ளதா என்பதை சரிபார்த்த பிறகு தான் சேவை கொடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.  நீங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் AirPods Proவை பழுது பார்க்கவேண்டுமா? உடனடியாக திட்டத்தை சரி பார்க்கவும்.